2025 மே 14, புதன்கிழமை

திருடப்பட்ட பாலியல் கருவிகளை தேடி பொலிஸார் வேட்டை

Kogilavani   / 2012 மே 15 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரிட்டனிலுள்ள வர்த்தக நிலையமொன்றிலிருந்து சுமார் 11,000 ஸ்ரேலிங் பவுன்கள் பெறுமதியான பாலியல் கருவிகள் திருடப்பட்டுள்ளன. இப்பொருட்களை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

வோர்செஸ்டஷயர் நகரிலுள்ள, இணையத்தளம் மூலம் பொருட்களை விற்பனை செய்யும் 'ஹெபி பனி' எனும் நிறுவனத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிறுவனத்தில் நான்கு சூட்கேஸ்களில் வைக்கப்பட்டிருந்த 400 இற்கும் மேற்பட்ட பாலியல் சாதனங்களை திருடர்கள் திருடிச் சென்றுள்ளதாக அந்நிறுவன ஊழியர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை இரவு 11.30 மணிக்கும் மறுநாள் காலை 9 மணிக்கும் இடையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முறைப்பாட்டையடுத்து அந்நிறுவனத்தில் பொலிஸார் சோதனைகளை மேற்கொண்டனர். இப்பொருட்களை மொத்தத் தொகையில் விற்பனை செய்வது திருடர்களுக்கு கடினமானதாக இருக்குமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .