2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

சூரியகுளியல் ஆசனத்தில் இரு நாட்கள் சிக்கிக்கிடந்த வயோதிப பெண்

Super User   / 2012 மே 27 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது வீட்டின் பெல்கனியில் சூரியகுளியல் ஆசனத்தில் அமர்ந்து கோடை வெயிலை அனுபவிக்க நினைத்த வயோதிப பெண்ணொருவர் ஆசனம் உடைந்;ததில் அதிலிருந்து வெளியேற முடியாமல் இரண்டு நாட்களாக அதற்குள் சிக்கிக்கொண்ட சம்பவம் சுவீடனில் இடம்பெற்றுள்ளது.

சுவீடனில் கால்ஸ்கோர்னா பகுதியில் வசித்துவரும் 84 வயது பெண்ணொருவரே இந்த விபரீத விபத்தை எதிர்கொண்டுள்ளார்.
அவரை தேடிய நண்பிகள் வந்த மீட்கும்வரை சூரிய குளியல் ஆசனத்திலே சிக்கிக்கொண்ட நிலையில் காணப்பட்டுள்ளார்.

"கடந்த பல வருடகாலத்திழல் அவர்  தேவாலயத்திற்கு செல்லும் நடவடிக்கையை ஒருபோதும் அவர் தவறிவிட்டதில்லை.
ஆனால், இரு நாட்களாக அவர் வராமலிருந்ததால அவருக்கு ஏதேனும் நடந்திருக்குமோ என சந்தேகித்து தேடத் தொடங்கினோம்" என குடியிருப்பாளர்கள் அமைப்பின் தலைவி லிலியன் ஆர்கர்ன் தெரிவித்துள்ளார்.

மேற்படி வயோதிப பெண்ணை காணாத அவரது நண்பிகள் மற்றும் அயலவர்கள் கவலைப்பட ஆரம்பித்ததுடன் உடனடியாக குடியிருப்பு தொகுதியின் காவலாளியை அழைத்துள்ளனர்.

 குறித்த பெண்ணின் வீட்டினை காவலாளி திறந்து பார்த்போது உதவியற்ற வயோதிப பெண் பெல்கனியில் வீழ்ந்து கிடந்ததை கண்டுள்ளார்.

பின் அவர் வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டு உடலில் ஏற்பட்ட சிறிய காயங்களுக்குச சிகிச்சை பெற்றுக்கொண்டு  வீடு திரும்பியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X