2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

சாண்ட்விச் தவறான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவசர தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்த நபர்

Kogilavani   / 2012 ஜூன் 22 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில் அவசர தொலைபேசி இழக்கமான 911 தொடர்புக்கொண்ட நபர் ஒருவர், தான்  கோரிய சாண்ட்விச்சை உணவு விடுதியொன்று மாற்றி அனுப்பிவிட்டதாக முறைப்பாடு செய்த சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.

ரோதர் மெக்லினோன் எனும் இந்நபர் குறித்த கடையில் சொற்ப அளவான வான்கோழி, மற்றும் ஹாம் மற்றும் அதிகமான சீஸ்,  மயோனெய்ஸ் என்பவற்றை தருமாறு கோரியிருந்தார்.

ஆனால், மேற்படி கடையானது தான் ஓடர் செய்த உணவு முறையை மாற்றி விளங்கிக்கொண்டதாகவும் மாறுபட்ட
அளவிலான உணவை விநியோகித்ததாகவும் அவர் அவசர தொலைபேசி இலகத்திற்கு முறைப்பாடு செய்துள்ளார்.

'நீங்கள் ஓடர் செய்த சாண்ட்விச்சை அவர்கள் தயாரித்த விதம் உங்களுக்குப் பிடிக்காததால் நீங்கள் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு  அழைப்பு ஏற்படுத்தியுள்ளீர்களா' என தொலைபேசியில் பதிலளித்தவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு மெக்லினோன், 'உண்மையாக. எனக்கு இந்த பிரச்சினையை சரியான முறையில் தீர்க்க வேண்டும். அவர்கள் என்னிடம் விளையாடியுள்ளனர். அதனால் நீங்கள் வருவீர்கள் என நான் நினைத்தேன்' எனக் கூறியுள்ளார்.

மேற்படி சான்ட்விச்களுக்கான  கட்டணத்தை செலுத்த வேண்டாமென தொலைபேசி அழைப்பில் பதிலளித்தவர் ஆலோசனை கூறியுள்ளார்.

மெக்லினோன் 14 சான்ட்விச்களுக்கு ஓடர் கொடுத்ததாகவும் அவரின் விருப்பப்படி அவ்வுணவு விசேடமாக தயாரிக்கப்பட்டதாகவும் கடையின் உரிமையாளரான டிலா அஸின்ஹெய்ரா தெரிவித்துள்ளார்.

எனினும்  பின்னர் மெக்லினோன் மீண்டும் தொலைபேசி அழைப்புவிடுத்து மன்னிப்பு கோரியதாகவும் டிலா கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .