2025 மே 14, புதன்கிழமை

கழிவறை அமைக்கக்கோரி கடற்கரையில் விநோத ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 23 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவில் உள்ள கடற்கரையொன்றில் கருப்பு நிற கோட்சூட், தொப்பி அணிந்த பலர்  கடற்கரையில்  வைக்கப்பட்டிருந்த கழிவறைகளில்  அமர்ந்து விநோதமான போராட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.

அடிலெய்ட் ஹென்லி கடற்கரையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றள்ளது. 'மலச்சிக்கல் கூட்டணி' என்ற தொனிபொருளில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அடிலெய்ட் ஹென்லி கடற்கரையில் போதுமான எண்ணிக்கையில் பொதுக் கழிவறைகள் இல்லாமைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதன்போது 12 ஆர்ப்பாட்டக்காரர்கள் தாம் கொண்டுவந்த கழிப்பறைகளை கொண்டு வந்த கடற்கரையில் வரிசையாக வைத்ததுடன் தமது காற்சாட்டைகளை கழற்றிவிட்டு அக்கழிப்பறைகளில் அமர்ந்த வண்ணம் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.

ஓவியர் அன்டிரிவ் பெயனிஸிலால் இந்த முன்னெடுக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஓவிய கண்காட்சிக்காக இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பான ஓவியத்தையும் அவர் காட்சிப்படுத்தவுள்ளார்.

இதேவேளை, அக்கடற்கரையில் பொதுக்கழிவறைகளை அமைப்பதற்கு பொருத்தமான இடம் குறித்து உள்ளூர் சமூகத்துடன் நகரசபை அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X