2025 மே 14, புதன்கிழமை

சுவர்கள், மதில்கள் மீது சைக்கிளை செலுத்தும் வீரர்

Kogilavani   / 2012 செப்டெம்பர் 10 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


திறமைமிக்க சைக்கிளோட்ட வீரரொருவர் மேற்கொள்ளும் சைக்கிளோட்ட சாகச வீடியோவானது இணையத்தளத்தில் வெளியாகி பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

இணையத்தளத்தில் வெளியான வீடியோக் காட்சிகளை இதுவரை 200,000 பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர்.

மாக்அஸ்கில் என்ற 26 வயதுடைய வீரரே கலிபோர்னியா நகரின் சேன் பிரென்சிஸ்கோ நகரில் இத்தகைய சாகசங்களை நிகழ்த்தியுள்ளார்.

இவ் வீரர் சுவர்கள், சிற்பங்கள் மற்றும் மரங்களின் மீது சைக்கிள்களை மிக நுட்பமாக செலுத்தியக் காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன. 

'நகரத்தை பார்வையிட வேறு வழிகள் இருப்பதாக நான் உணர்ந்தேன்' என அவ்வீரர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X