2025 மே 14, புதன்கிழமை

இரண்டு கிளைகளுடன் வாழை மரம்

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 14 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஆர்.கமலி)

மனிதர் மற்றும் விலங்குகளில் விதி விலக்கான அபூர்வமான விடயங்கள் நடப்பது போல் தாவரங்களிலும் அபூர்வமான விடயங்கள் நடக்கின்றன.

ஒரு வித்திலை தாவரமான வாழை ஒரு மரம் மாத்திரமே வளரும், ஆனால் இந்த வாழை மரம் இரண்டு கிளைகளுடன் வளர்ந்திருக்கும் அதிசயமான நிகழ்வு ஒன்று நுவரெலியா, தலவாக்கலை பகுதியில் நடந்துள்ளது.

தலவாக்கலை சென் கிளாயர் தோட்டத்தில் வசிக்கும் திருமதி ஜோதிமலர் என்பவரின் வீட்டில் வளர்ந்த வாழை மரம் ஆரம்பத்தில் ஏனைய மரங்களை போல் வளர்ந்து வந்தாலும் இடையில் இரண்டு கிளைகளாக வளர்ந்துள்ளன.

ஆரம்பத்தில் இதை சாதாரண விடயமாக இவர்கள் கண்டுக்கொள்ளாத போதிலும் மரம் பெரிதாக வளரும் பொழுது இதன் வித்தியாசம் தெரிய வந்துள்ளது.

இதனை பார்வையிட அயலவர்கள் வருகை தருவது போல் அயல் பாடசாலை மாணவர்களும் வருகை தருவதாக வீட்டில் வசிப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X