2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஆற்றில் மூழ்கிய நாயைக் காப்பாற்ற முயன்று உயிரை விட்ட இளம் ஜோடி

Kogilavani   / 2012 செப்டெம்பர் 28 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


திடிரென பெருக்கெடுத்த வெள்ளத்தில் தாம் வளர்த்து வந்த ஐந்து நாய்களும் அடித்துச் செல்லப்படுவதை அவதானித்து அவற்றை காப்பாற்ற முயன்று இளம் ஜோடியொன்று பரிதாபகரமாக உயிரழந்த சம்பவம் இங்கிலாந்தில் இடம்பெற்றுள்ளது.

அலிசியா வில்லியம்ஸ் (வயது 27) மற்றும் அவரது காதலர் டேவிட் பிளாட் (வயது 25) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மேற்படி ஜோடி, தாம் வளர்த்து வந்த ஐந்து நாய்களுடன் நாடைபயிற்சிக்கு மேற்கொண்டிருந்தபோது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வடக்கு வேல்ஸில் உள்ள கிளெடாக் ஆற்றில்; மேற்படி நாய்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 5 நாய்களும் காப்பற்றப்பட்டபோதும் காதல் ஜோடி உயிரிழந்துள்ளமை  குறிப்பிடத்தக்கது. (தட்ஸ்தமிழ்)

  Comments - 0

  • meenavan Saturday, 29 September 2012 02:45 AM

    அன்று முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி... அது சரித்திரம், இன்று செல்ல நாய்க்குட்டிகளுக்காக உயிர் ஈந்தது இளம் சோடி, உண்மை சம்பவம்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .