2025 மே 14, புதன்கிழமை

உயிருள்ள கார்ட்டூன் பொம்மையாக தன்னை மாற்றிக்கொண்ட இளம் பெண்

Kogilavani   / 2012 ஒக்டோபர் 01 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


அனிமேஷன் திரைப்படங்களில் அதீத ஆரவம் கொண்ட 19 வயது இளம் பெண்ணொருவர் தன்னை உயிருள்ள கார்ட்டூன் பொம்மையாக மாற்றிக்கொண்டுள்ள நிகழ்வு உக்ரைனில் இடம்பெற்றுள்ளது.

ஜப்பானில் அதிகமாக பினபற்றப்படும் இக் கலைச் செயற்பாட்டை உக்ரைனைச் சேர்ந்த எனஸ்டாசியா சப்ஜீனா என்ற 19 வயது இளம் பெண் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இவர் தனது பெயரையும் புகுஷிமி என்று மாற்றிக்கொண்டுள்ளார்.

அனிமேஷன் கதாப்பாத்திரங்களில் பெறும்பாலும் பெரிய கண்கள் மற்றும் பெரிய தலைகளை கொண்ட உருவங்களே காணப்படும். அவை அவற்றின் உடலமைப்புடன் ஒப்பிடுகையில் மிகவும் பெரியதாக காணப்படுகின்றன. அதேபோல் சப்ஜீனாவும் மிகப்பெரிய கண்கள் மற்றும் ஊதா நிற தலைமயிரைக் கொண்டவராக காணப்படுகின்றார்.

5 அடி 2 அங்குல உயரம் உடைய சப்ஜினா அனிமேஷன் பாத்திரத்திற்காக தனது உடல் பருமனிலிருந்து 6 இறாத்தல் நிறையை குறைத்துள்ளார்.

அனிமேஷன் பாத்திரத்திறகாக ஒப்பனை செய்யும்போது ஒவ்வொரு கண்களுக்கும் 30 நிமிடங்களை செலவிடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

சப்ஜீனாவின் ஃபேஸ்புக் இணையத்தளத்தில் 10,000இற்கும் மேற்பட்ட நண்பர்கள் உள்ளனர்.

அவர் ஒப்பனை செய்யும் ஒளிபதிவு காட்சியை தனது நண்பர்களுக்கு யூடியுப் மூலம் அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு தன்னை கார்ட்டுன் பாவையாக மாற்றிக்கொள்ளும் கதபாத்திரங்களில் சப்ஜினா முதன்மையானவர் அல்ல. இவருக்கு முன்னமே அமெரிக்காவைச் சேர்ந்த டெகோட்டா ரோஸ் அல்லது கொடா கொடி என்ற அழைக்கப்படும் பெண் தன்னை உயிர் வாழும் பாபி பொம்மையாக மாற்றிக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





You May Also Like

  Comments - 0

  • Muhammadh Aadhil Friday, 19 October 2012 05:28 AM

    லூசுப்பொண்ணே லூசுப்பொண்ணே லூசுப்பொண்ணே...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X