2025 மே 14, புதன்கிழமை

குப்பைத் தொட்டிக்குள் தலை மாட்டிக்கொண்டு தடுமாறிய நபர்

Kogilavani   / 2012 ஒக்டோபர் 01 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


பொது குப்பைத் தொட்டிக்குள் தலையை மாட்டிக்கொண்டு தடுமாறிய நபரை பல மணித்தியால போராட்டங்களின் பின்  மீட்ட சம்பவமொன்று ஸ்கொட்லாந்தில் இடம்பெற்றுள்ளது.

ஸ்கொட்லாந்தின் அபர்தீன் பகுதியில் உள்ள ஜஸ்டிஸ் நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேற்படி நபர் 4 அடி உயரமுள்ள குப்பைத் தொட்டிக்குள் இவ்வாறு தலையை மாட்டிக்கொண்டு தடுமாறியுள்ளார்.

பின்னர் தீயணைப்பு பிரிவினர் வரவழைக்கப்பட்டு அவர்களின் உதவியுடன் எவ்வித காயங்களுமின்றி மேற்படி நபர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

இந்நபர் காயங்களேதுமின்றி மீட்கப்பட்டாரென கிரம்பியன் பகுதியின் தியணைப்பு மற்றும் மீட்பு சேவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தற்போது மருத்துவ பரிசோதனைக்காக இந்நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X