2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

சிரித்து பழகும் சீனர்கள்

Kogilavani   / 2012 ஒக்டோபர் 30 , பி.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஒருவரை வசீகரிப்பதற்காக பலரும் பல யுக்திகளை கையாண்டுக்;கொண்டிருக்கின்ற நிலையில் சீனாவைச் சேர்ந்த சுங்க அதிகாரிகள் ஒருவரை வசீகரிப்பதற்காக சிரிப்பு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ் அதிகாரிகள் தமது பற்களில் நீளமான குச்சிகளை வைத்து சிரிப்பு பயிற்சியை பெற்று வருகின்றனர்.

சீனாவின் லியோனிங் மாகாணத்தில் சிரிப்பது எப்படி என்ற கற்கைநெறியொன்று தொடரப்பட்டு வருகிறது. இக் கற்கைநெறியிலே சுங்க அதிகாரிகளுக்கு சிரிப்பது எப்படி பயிற்சி வழங்கப்படுகின்றது.

வாடிக்கையாளர்கள் இடத்தில் சுங்க அதிகாரிகள் தமது தரத்தினை உயர்த்திக்கொள்வதே இப்பயிற்சி நெறியின் பிரதான நோக்கமாக அமைந்துள்ளது.

வசீகரத் தன்மை, நெறிமுறை மற்றும் அவர்களின் திறமைகளை மேம்படுத்தவதாக இப்பயிற்சி நெறி அமைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0

  • MHM.Nahthi Thursday, 31 January 2013 06:58 PM

    சிரிப்பெதற்கும் பயிற்சியா ?....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .