2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கணவன் மீது ஏற்பட்ட கோபத்தினால் பிள்ளைகளை பழிவாங்கிய தாய்

Kogilavani   / 2012 நவம்பர் 02 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இல்லற வாழ்க்கை ரம்மியமானது. எனினும் இது பல குடும்பங்களுக்கு கிடைப்பதில்லை. கணவன் மனைவிக்கிடையில் கோபம், சந்தேகம் மற்றுமன்றி பொருளாதார நெருக்கடி காரணமாகவும் குடும்பங்கள் சுக்குநூறாகி போய் பிள்ளைகள் அநாதைகளாக்கப்படும் சம்பவங்கள் இடம்பெறாமல் இல்லை.

எனினும் அமெரிக்காவில் கணவன் மீது ஏற்பட்ட கோபத்திற்காக தாயொருவர் தனது பிள்ளைகளை பலிவாங்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் சிகாகோ நகரிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கணவன் மீது கோபம் கொண்ட குறித்த பெண் தனது இரு பிள்ளைகளையும் பல தடவைகள் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளாள்.

தனது 7 வயது மகனை நூறு முறை கத்தியால் குத்திய அவள் 5 வயது மகளை 50 முறைக் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

எல்ஸ்பிய்டா பிலக்கஸ்கா என்ற 40 வயதே பெண்ணே இத்தகைய கொடூர செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.

கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ள இப்பெண் ஜஸ்டின் என்றழைக்கப்படும் தனது மகனை முதலில் கொலை செய்துவிட்டு பின்னர் 5 வயதுடைய தனது மகளை கொலை செய்துள்ளதாக வழக்குரைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

பிடியாணை உத்தரவின்றி மேற்படிபெண்ணை கைதுசெய்யுமாறு உள்ளூர் நீதிமன்ற நீதிபதி ஜோன் கின்ஸலா உத்தரவிட்டுள்ளார்.

வாகன ஓட்டுனரான தனது கணவர், பிள்ளைகளை தனது பொறுப்பில் விட்டுசென்றதாகவும் ஒரு வேலைக்காரியை போன்று இருந்து பிள்ளைகளை பராமரித்துக்கொண்டதுடன் அதனால் எழுந்த கோபத்தினால் தனது பிள்ளைகளை இவ்வாறு கொலை செய்ததாகவும் மேற்படி பெண் நீதிமன்றத்தில்  தெரிவித்துள்ளார்.

'எனது கணவனினால் மன வேதனை அடைந்தேன். அதனால் இந்த கொலைகளை செய்தேன்' என அப்பெண் தெரிவித்துள்ளார்.

வழக்குரைஞர்களை வைத்து தனக்கு வாதடும் வகையில் பொருளாதார வசதி இல்லையென குறித்த பெண் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து பொது வழக்கறிஞர் ஒருவரை நியமிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0

  • saf Friday, 02 November 2012 12:26 PM

    அமரிக்கா மற்றைய நாட்டு மக்களின் விடயத்தில் தலையிடுவதற்கு முன்னர், தனது நாட்டு மக்களுக்கு நாகரியத்தையும், மனித நேயத்தையும் கற்றுக்கொடுக்கட்டும்.

    Reply : 0       0

    jannah Saturday, 03 November 2012 02:02 AM

    இவருக்கு எந்த வழக்கரிஞரும் தேவையில்லை. உடனே தூக்கிலிடவும். கணவன் கஷ்டப்படுத்தும் போது ஆறுதலே அந்தக் குழந்தைகள்தான்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X