2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

கழுத்தை பதம்பார்த்த ஐஸ் பக்கெட் சவால்

Kogilavani   / 2014 செப்டெம்பர் 04 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஐஸ்பக்கெட் சவாலை வெற்றிகரமாக நிறைவேற்றிய பெண்ணொருவர் பரிதாபகரமாக தனது கழுத்தை உடைத்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தின் வடமேற்கு பகுதியிலுள்ள அழகு சாதனை நிலையமொன்றின் உரிமையாளரும்  இரண்டு பிள்ளைகளின் தாயுமான (40 வயது) விடாலி என்ற பெண்ணே  இத்தகைய விபரீத சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார்.

ஐஸ் பக்கெட் சாவலை ஏற்றுகொண்ட இப்பெண் மீது, அவரது மகளான அமண்டா தேவி ஐஸ் நீரை ஊற்றுகிறார். குளிர் தாங்க முடியாத அப்பெண் கத்திகொண்டு வீட்டினுள் ஓடும்போது கால் இடரி விழுகிறார். இதன்போது அவரது  கழுத்து பகுதி அடிப்பட்டு காயம் ஏற்படுகிறது.

இப்பெண் உடனடியாக வைத்தயசாலையில் அனுமதிக்கப்பட்டபோது இப்பெண்ணின் கழுத்து உடைந்துள்ளதாக வைத்தியசாலை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

'நான் கால் இடரி விழுந்தபோது எனது தலை தரையில் அடிப்பட்டது எனக்கு நினைவில் உள்ளது. எனது கழுத்து உடைந்துவிட்டதாக வைத்தியசாலை ஊழியர்கள் கூறிவிட்டனர். நான் பயந்தே போனேன். ஆனால் வைத்தியர்கள் எனது கழுத்து உடையவில்லை சுழுக்கியுள்ளது'
என்று தெரிவித்து எனது பயத்தை போக்கிவிட்டனர். உண்மையில் நான் அதிஷ்டமானவள் என்று அப்பெண் தெரிவித்துள்ளார். 


  Comments - 0

  • m.musthak Monday, 15 September 2014 05:33 AM

    தேவையில்லாத வேலை

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .