2025 மே 12, திங்கட்கிழமை

சொக்கலட் தேனீர் கூஜா

Gavitha   / 2014 செப்டெம்பர் 10 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


உலகியே முதன்முறையாக சொக்லட்டினாலான தேநீர் கூஜா ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

நியூயோர்க்கில் அமைந்துள்ள நெஸ்டல் ஃப்ரொடக்ட் டெக்னொலெஜி சென்டர் எனும் நிறுவனத்தில் தொழில் புரியும் ஜோன் கொஸ்டெலோ தலைமையிலான குழுவே இவ்வாறான புதியதொரு கூஜாவை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இத்தேநீர் கூஜாவானது 65 சதவீதம் சொக்லட்டினால் ஆக்கப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பதற்கு சுமார் இரண்டு மணித்தியாலங்கள் தேவைப்பட்டுள்ளன.

இதில் என்ன விசேடத்துவம் என்றால் சொகலட் என்றாலே உருகும் பொருள். ஆனால் சொகலட்டினால் வடிவமைக்கப்பட்டுள்ள இக்கூஜாவில் தேநீர் ஊற்றி பரிமாறக்கூடியதாக உள்ளது.

இதனுள் சுடுநீரை ஊற்றி தேநீர் பொடியை இட்டதன் பின்னர் 2 நிமிடத்துக்குள் சொக்லட் தேநீர் தயாராகிவிடும்.

சுடுநீரை கூஜாவினுள் ஊற்றியவுடன் அதனுள் உள்ள சொக்லட் உருகும். சுடுநீர் பட்டவுடன் தேநீர் கூஜா உருகி ஊற்றிவிடாது என  அதனை தயாரித்தவர் அந்நாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.




You May Also Like

  Comments - 0

  • m.musthak Monday, 15 September 2014 05:31 AM

    அற்புதம்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X