2025 மே 12, திங்கட்கிழமை

குழந்தையின் மூக்கை பதம்பார்த்த மரக் குச்சி

Kogilavani   / 2014 செப்டெம்பர் 23 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


குழந்தையொன்றின் நாசித்துவராத்துக்கூடாக 3 அங்குல நீளமுடைய மரக்குச்சியொன்று சென்றதால் அக்குழந்தை உயிராபத்தை எதிர்கொண்டுள்ளது.

சீனாவின் ஹுபாய் மாகாணம், வுஹானைச் சேர்ந்த ஹங் சியெங் என்ற 2 வயது குழந்தையே இத்தகைய விபரீத சம்பவத்தை எதிர்கொண்டுள்ளது.

குழந்தையின் நாசித்துவாரத்துக்கூடாக சென்ற மரக்குச்சியானது குழந்தையின் மூளையையும் ஊடுருவி சென்றுள்ளது.

இந்நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில்  குழந்தையை பெற்றோர்கள் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

நான்கு மணித்தியால சத்திரசிகிச்சையின் பின்னர் மரக்குச்சியை வைத்தியர்கள் அகற்றியுள்ளனர்.

'எனது மகனின் நாசித்துவாரத்துக்குள் 3 அங்குல நீளமுடைய மரக்குச்சி இருப்பதை கண்டு பயந்துபோனேன். அவனது மூக்கில் இருந்து இரத்தம் வரத்தொடங்கியது. நாங்கள் உடனடியாக மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துவந்து விட்டோம். மருத்துவர்களின் 4 மணித்தியால போராட்டத்தினால் எனது மகன் உயிர்பிழைத்துவிட்டான்' என குழந்தையின் தந்தை ஊடங்களுக்கு தெரிவித்துள்ளார்.

குழந்தையின் மூளையை ஸ்கேன் செய்து பார்த்தபோது மரக்குச்சி மூளையை ஊடருத்து நின்றமை தெரியவந்தது. ஆனாலும் 'குழந்தையின் மூளையில் பெரியளவில் பாதிப்புகள் இல்லை' என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X