2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

ஓவியப் பெண்

Gavitha   / 2014 செப்டெம்பர் 24 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஆய கலைகள் 64 என்பார்கள். ஒரு விடயத்தை அழகுடனும் நேர்த்தியுடனும் பார்ப்போர், கேட்போருக்கு சுவைபட வழங்கி, அவர்களது சிந்தையில், உணர்வில் ஓரளவாவது அசைவை ஏற்படுத்துவதே கலை என்று கூறலாம்.

சிலருக்கு இயற்கையாகவே சில திறமைகள் அமைந்திருக்கும். சிலர் தாமாகவே திறமைகளை வளர்த்துக் கொள்வார்கள். அதிலும் சிலர் மாத்திரம்தான் தமது கலைகளின் ஊடாக சாதனைகளை செய்து உலகின் கவனத்தை தன்பால் ஈர்க்கின்றனர்.

அந்தவகையில் நியூயோர்க்கை சேர்ந்த 21 வயதுடைய பெண்ணொருவர் தன்னுடைய வித்தியாசமான ஓவிய ஆற்றலால் உலகில் பலருடைய பார்வைகளை தன்மீது விழவைத்துள்ளார்.
 
ஓவியம் வரைவதில் திறமைமிக்க இப்பெண், தனது எண்ணங்களை வண்ணமாக்க காகிதத்தை தேடவில்லை. மாறாக தனது முகத்தையே வண்ணங்களால் மின்னச்செய்துள்ளார்.
 
அழகான சிங்கங்கள் முதல் பதற வைக்கும் பேய்கள் என பல வடிவங்களை இவர் தனது முகத்தில் வரைகிறார்.
இவர், தனது முகத்தில் வரையும் ஓவியங்களை இன்ஸ்டகிராமில் பதிவேற்றம் செய்து வருகிறார். இவரது இணையத்தளத்தை 6,000க்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர்.

நான் இதனை ஒரு பொழுது போக்காகவே செய்து வருகின்றேன். இரவில் எனது படுக்கையறையில் வரைந்து பார்ப்பேன். அப்போதுதான் யாரும் என்னை பார்க்கமாட்டார்கள். அதுமட்டுமின்றி, நான் யாருக்கும் இவ்வாறு செய்து வரைந்து காண்பிப்பதுமில்லை.

ஒருநாள் நான் வெளியிலுள்ள மின்விளக்குகளை அணைப்பதற்காக சென்றேன். அப்போது என்னை பார்த்துவிட்டு பாதையில் சென்றவர்கள் பயந்தே போய்விட்டனர். சிலர் ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்றுவிட்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.  










  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .