2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

காதுக்குள் குடிபுகுந்த பூச்சி

Gavitha   / 2014 ஒக்டோபர் 08 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

காதின் அருகில் சிறியதொரு எறும்பு சென்றாலே கால்கள் திண்டாடி கிச்சுகிச்சு வரும். அப்படியிருக்கையில் 3 அங்குல பூச்சியொன்று காதினுள் இருந்தால் என்னவாகும்?

கடுமையான காது அரிப்பு என்று கூறி வைத்தியர்களிடம் சிகிச்சைக்காக சென்ற பேராசியர் ஒருவரின் காதிலிருந்து, 3 அங்குல நீளமுடைய பூச்சியொன்று அகற்றப்பட்ட சம்பவம் இங்கிலாந்தில் இடம்பெற்றுள்ளது.

இங்கிலாந்திலுள்ள பல்கலைக்கழகமொன்றில், பேராசிரியராக கடமைபுரியும் மைகல் சுவீட் என்பவரே இத்தகைய விபரீத சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார்.

காதினுள் ஏற்பட்ட அரிப்புக் காரணமாக வெகுவாக பாதிக்கப்பட்ட இவர், வைத்தியரின் உதவியை நாடியுள்ளார். தனது காது வேதனைதரக்கூடிய வகையில் அரிப்பதாகவும் காதுக்குள் ஏதோ இருப்பதை தான் உணர்வதாகவும் வைத்தியர்களுக்கு பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

இவரது காதை பரிசோதித்த வைத்தியர்கள், காதினுள் 3 அங்குல நீளமுடைய பூச்சி இருப்பதை கண்டறிந்துள்ளனர். காதினுள் ஏதேனும் கருவிகளை புகுத்தினால் பூச்சி உள்ளே சென்று விடும். அப்படி சென்று விட்டால் அதனை வெளியில் எடுப்பது மிகவும் சிரமமான விடயமாகிவிடும் என்பதனால், குறடு போன்றதொரு கருவியை காதினுள் நுழைத்து பூச்சியை வெளியிலெடுத்துள்ளனர்.

பூச்சி எவ்வளவு காலம் காதினுள் இருந்தது என்பது குறித்து தெரியாது. ஆனால், அது சிறியதாக இருக்கும் போதே காதினுள் சென்றிருக்கும் என்றும் உள்ளேயே வளர்ந்திருக்கலாம் என்றும் வைத்தியர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

காதினுள் உள்ள திசுக்களுக்கு பூச்சி எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லையென்றும் சிறு காயங்களை மாத்திரம் ஏற்படுத்தியுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது வைத்தியர்களினுடைய ஆய்வுக்கூடத்தில் பூச்சி உயிருடன் இருக்கின்றதாம்.


  Comments - 0

  • pachaiyappan Friday, 10 October 2014 10:39 AM

    உடல் நலம் பேணல் மிக முக்கியமானது. சுத்தமான பஞ்சு மூலம் நமது முன்னோர்கள் காதுகளை அடிக்கடி சுத்தம் செய்து வந்துள்ளனர். இச்செய்தி நமக்கு ஒரு சமிக்ஞை.

    Reply : 0       0

    Akila Hareth Sunday, 12 October 2014 01:42 AM

    ஆச்சரியமா இருக்கு

    Reply : 0       0

    MD Tuesday, 14 October 2014 09:48 AM

    இது இங்கிலாந்தில் நடந்திருக்கலாம். ஆனால் அந்த பூச்சியை வைக்கும் தாளில் தமிழ் எழுத்துக்களை காண‌முடிகிறது.

    Reply : 0       0

    mohamed asmir Wednesday, 15 October 2014 07:11 AM

    நாய் நடமாட்டம் அதிகம் - காதை மூடிக்குங்க‌

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X