2025 மே 15, வியாழக்கிழமை

திருமணத்துக்காய் கதறும் சிறுவன்

Gavitha   / 2014 ஒக்டோபர் 15 , மு.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

'காதல் திருமணம் என்றால் தானாக குழியில் விழுவது, நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றால் பெற்றோர்கள் இணைந்து பிள்ளைகளை குழியில் தள்ளுவது' என்பது புதுமொழி.

அவ்வாறிருக்கையில், தன்னால் திருமணம் செய்துகொள்ள முடியவில்லை என்று நினைத்து, தேம்பி தேம்பி  அழுத, 6 வயது சிறுவன் தொடர்பான காணொளி பலரை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.

'டீன்' என்று மாத்திரம் அறியப்பட்ட சிறுவனொருவன், ஒருநாள் தனது அறையில் அமர்ந்து அழுதுகொண்டிருந்துள்ளான். ஏன் அழுகிறாய் மகனே? என்று தந்தை கேட்டுள்ளார்.

'நான் ஒருபோதும் திருமணம் செய்ய மாட்டேன். இப்போது தான் எனக்கு 6 வயதாகின்றது. அடுத்த வருடம் 7 வயதாகும். எனக்கு 80 வயதாகவேண்டும் என்று ஆசைப்படுகின்றேன். ஏனெனில் எனக்கு திருமணம் செய்துகொள்ள ஆசையாக உள்ளது. எத்தனை நாட்கள் தான் நான் காத்திருப்பேன்' என அச்சிறுவன் பதிலளித்துள்ளான்.

இதனை கேட்ட தந்தை 'திருமணம் செய்தவதற்கு 18 வயதாகவேண்டும். அதற்கு வெகு நாட்களில்லை. 626 கிழமைகளே உள்ளன' என்று பதிலளித்துள்ளார்.

அத்துடன் தனது மகனின் செயற்பாட்டை  காணொளியாக எடுத்து இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். 
இக்காணொளியை சுமார் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0

  • thasan Wednesday, 15 October 2014 05:51 PM

    பூச்சி பெயர் என்ன?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .