2025 மே 15, வியாழக்கிழமை

மருமகன் கொலை: மாமிக்கு நிர்வாணத் தண்டனை

Kogilavani   / 2014 நவம்பர் 10 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


மருமகனை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், 45 வயது பெண்ணொருவரை நிர்வாணமாக்கி, முகத்தில கரியைப் பூசி, கழுதை மேல் ஏற்றி ஊர்வலம் கூட்டிச்சென்ற ஊரவர்கள் தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளன.

ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டத்திலேயே இந்த மனிதாபிமானமற்ற அநாகரீக செயல் நடைபெற்றுள்ளது. இச்சம்பவத்துடன் தொடர்புடைய 30 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் நடந்த கிராமத்தில் பழங்குடியின மக்களே அதிகம் வாழ்ந்து வருகின்றனர்.

குறித்த பெண்ணின் மருமகன் ஒருவர் இறந்துள்ளார். அவர் இறந்ததற்கான காரணங்கள் தெரியாதபட்சத்தில், இது குறித்து பொலிஸாருக்கு தெரியப்படுத்தாமல், உடலை எரித்துள்ளனர்.

அவரை இந்த பெண்;தான் கொன்றுள்ளார் என்று அந்த ஊரில் உள்ள பஞ்சாயத்து தலைருடன் கூடிய குழு முடிவெடுத்து, இந்த கொடூரமான தண்டனையை அப்பெண்ணுக்கு விதித்துள்ளனர்.

பின்னர், கிராமத்தின் நடுவில் வைத்து அத்தனை பேர் பார்க்க அப்பெண்ணை நிர்வாணப்படுத்தியுள்ளனர். பின்னர் அவரது முகத்தில் கரியைப் பூசி கழுதை மீது ஏற்றி, கிராமம் முழுவதும் சுமார் ஒரு மணி நேரம் அவரை ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர்.

இதை பார்த்த அந்த பெண்ணின் கணவர் பொறுக்கமுடியாமல்; பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸார் வழக்குப் பதிவு செய்து 30 பேரைக் கைது செய்தனர். இதில் 9 பேர் அந்தப் பெண்ணின் உறவினர்களாம்.

தற்போது பாதிக்கப்பட்ட பெண் இன்னும் அதிர்ச்சி குறையாமல் உள்ளார். அவருக்கு மன நல ஆலோசனை வழங்கப்பட்டு வருகின்றதாம்.

You May Also Like

  Comments - 0

  • mahesh Thursday, 13 November 2014 09:57 AM

    Andha 30 pearayum thukula podanum.

    Reply : 0       0

    ramachandran Saturday, 15 November 2014 09:59 AM

    இது ஒரு காட்டுமிரண்டி செயல்.
    எல்லோரும் தலை குனிய வேண்டும்.
    இனி இதுபோல் நடக்கக்கூடாது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .