2025 மே 15, வியாழக்கிழமை

பற்றீரியாக்களுக்கு எமனான காளான்

Gavitha   / 2014 நவம்பர் 12 , மு.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


குதிரை சாணத்தில் வளரும் காளானை பக்டீரியாக்கள் சிலவற்றை அழிப்பதற்கு மருந்தாக, ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

உலகளாவிய ரீதியில் பலரின்; மரணத்துக்கு காரணமான பக்டீரியாக்களை அழிப்பதற்காக புதிய மருந்துகளை கண்டுபிடிக்க வேண்டுமென, பல விஞ்ஞானிகள் தமது ஆயுள் காலத்தை ஆய்வுக் கூடத்தில் செலவளித்துள்ளமை நாம் அறிந்ததே.

இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பக்டீரியாக்களை அழிப்பதற்கு சிறந்த மருந்தாக குதிரை சாணத்தில் வளரும் காளானை சுவிட்ஸர்லாந்திலுள்ள விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

'இது அருவருக்கத்தக்க விடயம் என்றாலும் அந்த காளான் மருந்தாகவே கருதப்படுகின்றது. இது மற்றைய காளான்களை விட வித்தியாசமாகவும் கருஞ்சாம்பல் நிறத்தையும் கொண்டிருக்கும். இந்த சாம்பல் காளானானது உயிர்வேதியியல் வகையைச் சேர்ந்தது என்பதால், இதில் புரதம் அடங்கியுள்ளது. இது பாரம்பரிய உயிர்கொல்லியாக பயன்படுத்தப்பட்டுள்ளது' என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பேராசிரியர் மார்கஸ் தலைமையிலான குழுவினால் கண்டுபிடிக்கப்பட்ட இக்காளானை, இனி எவ்வாறு மருந்தாக பயன்படுத்தி, எந்த முறையில் மனித உடலுக்கு உட்செலுத்தலாம் என்பது தொடர்பான ஆராய்ச்சிகளை குறித்த குழு தற்போது மேற்கொண்டு வருகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .