2025 மே 15, வியாழக்கிழமை

குரூரமான நாய்ச்சண்டை

Gavitha   / 2014 நவம்பர் 19 , மு.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட அயர்லாந்தில் நாய்ச்சண்டை நடத்தும் ஆர்வலர்கள், படுபயங்கரமான நாய் இனங்களை உருவாக்கி வளர்த்து விற்பனை செய்கின்றனர். இப்படியான நாய் ஒன்று 5,000 ஸ்ரேலிங் பவுண்ட் வரை விலை போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நாய்களுக்கு, களவாடிய செல்லப்பிராணிகள், நரிக்குட்டிகள், நீர்க்கீரிகள் இரையாக கொடுத்து இரத்த வெறியூட்டப்படுகின்றது. நாய்கள் சண்டையில் வெற்றிபெறும் போது அதன் உரிமையாளர்களுக்கு பரிசுத் தொகை கிடைப்பதுடன் மாதாந்தப் பணமாக பெருமளவு பணமும் சம்பாதிக்க முடிகின்றது.

நாய்ச் சண்டை, சட்ட விரோதமானதாயினும் பந்தயம் நடத்துவோர் சட்டத்தின் குறைபாடுகளை பயன்படுத்தி இவ்வகை நாய்ச்சண்டைகளை நடத்தி வருகின்றனர். இதைவிட, இரகசியமாக நடைபெறும் நாய்ச்சண்டை போட்டிகளின் காணொளிகள், சமூக வலைத்தளங்களுக்கு பெரும் விலையில் விற்கப்பட்டு வருகின்றன.

நாய்கள், வீட்டு பூனைகளை கடித்து கிழிக்கும் காணொளிகளும்  நரிகளின் கழுத்தை பிய்க்கின்ற காணொளிகளும்  நீர்கீரிகளை குழுவாக வேட்டையாடுவதையும் காட்டும் இரத்தத்தை உறைய வைக்கும் காணொளிகள்  சமூக வலைத்தளங்களில் பதிவாகியுள்ளன.

வேறு சில காணொளிகள் இரண்டு நாய்களுக்கிடையிலான சண்டைக் காட்சிகளைக் கொண்டுள்ளன. இரத்தம் தோய்ந்த நிலையில் பின் வாங்கும் நாய்கள், சாகும் வரை போராடும் படி மீண்டும் தள்ளிவிடப்படுகின்றன. பல்வேறு சிறப்பியல்புகளை கொண்ட நாய்கள் கலப்பு செய்யப்பட்டு, பயங்கரமான புதிய இனங்கள் தோற்றுவிக்கப்படுகின்றன.

குட்டியீனும் காலம் கடந்த பெண் நாய்களும் தொடர்ந்து சண்டையில் ஈடுபடுத்த முடியாத நாய்களும் சுட்டுக்கொல்லப்படுகின்றனமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .