2025 மே 15, வியாழக்கிழமை

மிருகங்களை வதைக்கும் காளை மாட்டின் மகிழ்ச்சிப் பூரிப்பு

Gavitha   / 2014 நவம்பர் 19 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


வேதனையில் நெளிந்து புரழும் தீப்பிடித்த காளைமாடு, இருட்டிலிருந்து பாயந்து வரும் காட்சிகள் அடங்கிய கொண்டாட்டமொன்றின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஸ்பெயினின் மெற்றிட்க்கு வட கிழக்கே உள்ள சோறிய மகாணத்தைச் சேர்ந்த மெதினாசெலி எனும் கிராமத்திலேயே இந்த கொடூரமான கொண்டாட்டம் நடைபெறுகின்றது.

இது மத்திய கால கிராமிய கதைகளில் வரும் உலக அழிவுக் காட்சியல்ல. காளைமாடுகளுக்கு தீ முட்டி வீதி வழியே ஓடவிட்டு மகிழும் ஸ்பானிய திருவிழாவில் நடக்கும் ஒரு கொடூரமான நிகழ்வாகும்.

ஸ்பானிய காளை மாடுகளுக்கு தீ மூட்டும் இந்த திருவிழாவில் எடுக்கப்பட்ட படங்கள் மனதை கலங்கவைக்கின்றன. இந்த கொண்டாட்டத்துக்கு தடை விதிக்க வேண்டுமென விலங்கு உரிமைகள் செயற்பாட்டாளர்கள் போராடி வருகின்றனர். இந்த படங்களில், விலங்கு உரிமை செயற்பாட்டாளர்கள் பொலிஸாருடன் மோதும் காட்சிகளும் அடங்கியுள்ளன.

இந்த திருவிழா 'காளை மாட்டின் மகிழ்ச்சி பூரிப்பு' என அழைக்கப்படுகின்றது. மாட்டை நிலத்தில் விழுத்தி, தீப்பற்றும் இரசாயனம் தோய்த்த பலகைகளை அதன் கொம்பில் இறுகக்கட்டி தீ மூட்டுகின்றனர்.

வேதனை தாங்க முடியாமல் அதற்கென்று அமைக்கப்பட்டுள்ள அடைப்புக்குள் சுழன்று சுழன்று ஓடும் போது அதிலிருந்து வாணவெடி போன்று தீப்பொறிகள் பறக்கும். இதனைக் கண்டு அங்கு கூடியிருக்கும் மக்கள் கைகொட்டி மகிழ்ந்து ஆரவரிப்பர்.

அது மாத்திரமல்ல, காளை ஓடும் அடைப்புக்குள் சிலர் புகுந்து காளைக்கு மேலும் மேலும் துன்பத்தை கொடுப்பர். இந்த கொண்டாட்டம் தொடர்ச்சியாக 45 நிமிடங்கள் நடைபெறும். அதன் பின்னர் மாடு இளைத்து விழுந்தவுடன் மாட்டை கட்டி இழுத்து கொன்று அதை இறைச்சியாக்கி, சமைத்து உண்டு மகிழ்வர். இவ்வாறான கொடூர திருவிழாவுக்கு விசேட அந்தஸ்த்து வழங்கப்பட்டிருப்பது கவலைக்குரிய விடயமாகும்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .