2025 மே 15, வியாழக்கிழமை

கழிவறை கூரையின் மீது நிர்வாணமாக ஏற முயன்ற இளைஞன் கைது

Kogilavani   / 2014 நவம்பர் 23 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

விமான நிலையத்தில் உள்ள பெண்களின் கழிவறையின் மேற்கூரையில் நிர்வாணமாக ஏற முயன்று கீழே விழுந்த வாலிபரை அமெரிக்க பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கேமரூன் ஷென்க்(26) என்ற வாலிபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இவர், அமெரிக்கா, லோகன் விமான நிலையத்தில் வைத்து இவ் விபரீத செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி வாலிபர், பெண்களது கழிவறைக்கு சென்று தனது ஆடைகளை அவிழ்த்துவிட்டு நிர்வாணமாக நின்றுள்ளார்.

பின்னர் அவர் கூரையை பிடித்து மேலே செல்ல முயன்று கீழே விழுந்துள்ளார். அதன் பிறகு அவர் 84 வயது தாத்தா ஒருவரை தாக்கினார்.

இவ்விளைஞனை பொலிஸார் கைதுசெய்ய முயன்றபோது, கேமரூன் பொலிஸாருடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

மிகுந்த போராட்டத்தின் பின்னர் ஒரு வழியாக அவ்விளைஞனை பொலிஸார் கைதுசெய்தனர். 

கழிவறையில் விழுந்ததில் காயம் அடைந்த கேமரூன் மசாசுசெட்ஸ் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிகிச்சைக்கு பிறகு அவர் பாஸ்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .