2025 மே 15, வியாழக்கிழமை

முட்டை தந்த அதிஷ்டம்

Kogilavani   / 2014 டிசெம்பர் 16 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

குடும்ப கஷ்டத்துக்காக முட்டை திருடிய பெண்ணுக்கு அதிஷ்டம் வந்து வாய்த்த சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் வசித்து வருபவர் ஹெலன் ஜான்சன் (47).

இவர் இரண்டு மகள்கள், ஒர் உறவுக்கார சகோதரி, ஒரு வயதிலும் 3 வயதிலும் இரண்டு பேரக் குழந்தைகள் ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார்.

மிகவும் வறுமையில் வாடி வரும் இவர், கடைக்குச் சென்று முட்டை வாங்கினார். அப்போது யாருக்கும் தெரியாமல் ஐந்து முட்டைகளைத் தன் ஆடைக்குள் மறைத்தார். எனினும் அவை உடைந்துவிட்டன. இவர் திருடுவதைப் பார்த்த வில்லியம் ஸ்டேசி எனும் காவலர் இவரைக் கையும் களவுமாகப் பிடித்தார். அப்போது ஹெலன், தான் இரண்டு நாட்களாக எதையும் சாப்பிடவில்லை என்றும் வீட்டில் பட்டினி கிடக்கும் தன் பேரக் குழந்தைகளுக்காகத் தான் இதனை திருடினேன் என்றும் கூறினார்.

இதைக் கேட்டு மனம் நெகிழ்ந்த வில்லியம், உடனே கடைக்குச் சென்று அவருக்கு ஒரு டஜன் முட்டைகளை வாங்கிக் கொடுத்தார். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு, நாடெங்கிலும் உள்ள மக்கள் பலர் ஹெலனுக்கு உணவுப் பொருட்களையும் உடைகளையும், நிதி உதவியையும் அளித்து வருகின்றனர்.

மேலும் வில்லியம் தன் சக பணியாளர்களுடன் சேர்ந்து ஹெலனின் வீட்டுக்கு உணவுப் பொருட்களைக் கொண்டு வந்து இறக்கினார்.

இதனால் ஹெலனின் குடும்பத்தினர் கிறிஸ்துமஸ் நாளை பசியில்லாமல் கழிக்க முடியும் என்று வில்லியம் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து பொலிஸார், கிறிஸ்துமஸ் தினத்தன்று அந்தக் குடும்பத்துக்கு அன்பளிப்புகள் வழங்கவும் ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

இந்த நடவடிக்கைகளால் ஆனந்தமடைந்துள்ள ஹெலன், 'கடைசியாக என்னுடைய 12 வயதில் தான் இந்த வீட்டில் சாப்பாடு இருந்து பார்த்திருக்கிறேன். அப்போது நான் என் பாட்டியுடன் இருந்தேன். இப்போது மக்கள் செய்த உதவியை நினைத்து நாளெல்லாம் நான் கண்ணீர் விட்டேன்' என்று கூறினார்.

ஆனாலும், திருடிய குற்றத்துக்காக இப்பெண்ணை பொலிஸார் கண்டித்துள்ளமை குறிப்பிடடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .