2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

கடலுக்கு அடியில் மர்ம உயிரினம்

Gavitha   / 2014 டிசெம்பர் 16 , பி.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


அண்மையில் கடலுக்கு அடியில் மிகப்பெரிய நண்டு ஒன்று புகைப்படமாக வெளியிடப்பட்டிருந்தது.

தற்போது நியூசிலாந்தில் மிகவும் வசீகரமான கடலொன்றான டர்க்கைஸ் கடலுக்கடியில் உலாவிய மாபெரும் மர்ம கடல் உயிரினம் ஒன்றின் புகைப்படங்கள் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளன.

இந்த படமானது கூகுள் ஏர்த் வரைபடத்தின் மூலம் கண்டிறியப்பட்டுள்ளது. குறித்த கடலின் ஓக் விரிகுடாவுக்கு அண்மித்த பகுதியிலேயே இந்த கடல் உயிரினம் உலாவியுள்ளது.

பொறியியலாளர் பிட விடேஹிரா என்பவர், தனது விடுமுறை இல்லத்தை கூகுள் ஏர்த் மூலம் தேடிக்கெண்டிருந்துள்ளார்.

இதன்போது சுமார் 12 மீற்றர் நீளத்துக்கு இந்த கடல் உயிரினம் தென்பட்டுள்ளது. இது மிகவும் வேகமாக சென்றது என்றும் வேகமாக தனது உடலை திருப்பக்கூடியதாக இருந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X