2025 மே 15, வியாழக்கிழமை

பூங்காவை ரசிக்க வந்த நீர்நாய்

Gavitha   / 2014 டிசெம்பர் 24 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீரில் வாழும் நீர் நாயொன்று பூங்காவை ரசிக்க வந்த விநோத சம்பவம் இங்கிலாந்தில் இடம்பெற்றுள்ளன.


இங்கிலாந்து, செயின்ட் ஹெலன்ஸ், மெர்செசைட் அருகே உள்ள நியூட்டன் லீவிலோவ்ஸ் எனும் பிரதேசமொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.


நபரொருவர் தனது நாயுடன் நடை பயிற்சிக்கு சென்றுள்ளார். இதன்போது, வித்தியாசமான உருவத்தில் பூங்காவில் ஏதோடு படுத்திருப்பதை கண்டு அதன் அருகில் சென்று பார்த்துள்ளார்.


படுத்திருப்பது நீர்நாய் என்பதை கண்ட நபர் அதிர்ச்சியடைந்து, பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.


சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார், இந்த நீர்நாய்கள் சக்திவாய்ந்த மிருகம் என்றும் ஆபாத்தை தரக்கூடியது என்றும் தெரிவித்து பொதுமக்களை தூர நிக்குமாறு தெரிவித்துள்ளனர்.


இந்த நீர்நாய் அங்குள்ள மெர்சி நதியிலிருந்து இப்பகுதிக்கு வந்திருக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.


தற்போது நீர்நாய் பாதுகாப்பாக அங்குள்ள சரணாலயம் ஒன்றுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .