2025 மே 15, வியாழக்கிழமை

நண்பனின் உயிரை மீட்ட குரங்கு

Gavitha   / 2014 டிசெம்பர் 24 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்ற பரிணாம வளர்ச்சிக் கொள்கையை இடார்வின் என்பவர் முன்மொழிந்தார். குரங்குகளுக்கு இரண்டு மூளைகள் உண்டு. ஒன்று உடலையும் மற்றொன்று வாலையும் செயல்பட வைக்கிறது என்பதே உண்மை.


அவ்வாறிருக்கையில், உயிருக்காக போராடிக்கொண்டிருந்த தனது நண்பனை சுமார் 20 நிமிட போராட்டத்தின் பின் உயிர்மீட்ட குரங்கொன்றின் வீடியோ காட்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


இந்தியாவின் வடக்கு பகுதி, கான்பூர் எனும் ஊரிலுள்ள புகையிரத நிலையத்தில் அண்மையில்; இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குரங்கொன்று புகையிரத நிலைய தண்டவாளத்துக்கு மேல் பொருத்தப்பட்டிருந்த மின்கம்பிகளில் தாவிக்கொண்டு இருந்துள்ளது. குறித்த கம்பியில் ஏற்பட்டிருந்த மின்ஒழுக்கு காரணமாக, அக்குரங்கு மின்சார தாக்குதலுக்கு இலக்கானது.


இந்த காட்சியை சுற்றியிருந்த மனிதர்கள் தமது அலைபேசியில் வீடியோ காட்சியாக பதிவு செய்து கொண்டிருந்துள்ளனர்.


ஆனால் தனது நண்பன் மின்சார தாக்குதலுக்கு உள்ளானதை கண்ட மற்றுமொரு குரங்கு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்துள்ளது.


எப்படியாவது தனது நண்பனை காப்பாற்றி விடவேண்டும் என்ற நோக்கில், மயங்கி கிடந்த குரங்கை தடுமாறி தடுமாறி தூக்கி பாதுகாப்பான இடத்துக்கு கொண்டுசென்றது. பின்னர், அதனை தட்டி தட்டி அடித்து நீரில் போட்டு அமிழ்த்தி சுயநினைவுக்கு கொண்டுவந்தது.


இதன்பின்னர் குரங்கை அமர வைத்து முதுகு தேய்த்து விட்டுள்ளது.  மயங்கியிருந்த குரங்கு மொதுவாக கண்திறந்து பார்க்கும் காணொளி இணையத்திளத்தில் வெளியாகி, அதை பார்த்த அனைவரது மனதையும் உருக வைத்துள்ளது.


குரங்கிகளின் வாழ்க்கையிலும் மனிதனை விஞ்சிய செயற்பாடுகள் காணப்படுகின்றன என்று கூறினால் அது மிகையாகாது.


You May Also Like

  Comments - 0

  • Thiru Friday, 26 December 2014 02:36 PM

    I watched the whole video in youtube and wondered seeing the untiring efforts of the friend monkey to make the electrocuted monkey survive. It did the correct first aid. A lesson to the human beings.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .