2025 மே 15, வியாழக்கிழமை

மன்னிப்பு கேட்டது முகநூல்

Gavitha   / 2014 டிசெம்பர் 30 , பி.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


உலக மக்கள் அனைவரும் தினமும் வாழந்து கொண்டிருக்கும் பிரபல சமூக வலைதளமாக முகநூல் விளங்குகின்றது எனலாம்.
இவ்வாறிருக்கையில், இந்த முகநூல் சமீபத்தில் அதனது பயனாளிகளின் கோபத்துக்கு ஆளாகியுள்ளது.

அது என்னவென்றால், '2014ஆம் ஆண்டின் நினைவுகள்' என்ற பெயரில் ஒவ்வொரு பயனாளிக்கும் ஒரு பதிவை அனுப்பி வைத்தது. இப்பதிவானது, 2014ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் இறுதிவரை ஒவ்வொரு பயனாளியும் பதிவுசெய்த விடயங்களின் தொகுப்பாக அமைந்தது.

ஆனால், அதில் நண்பர்கள், குடும்பம், உறவினர்கள் மற்றும் வீடுகளை இழந்தவர்களின் மனதை பாதிக்கும் பதிவுகளையும் முகநூலல், இணைத்து அனுப்பியுள்ளது. இதனால் பயனாளிகளுக்கிடையில், மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த எரிக் மேயர், இந்த வருடத்தின் தொடக்கத்தில் மூளை புற்றுநோயால் இறந்த தனது மகளின் புகைப்படத்தை அவரது பின் நோக்கிய நினைவுகளில் பார்த்தது கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

இந்த பாதிப்பை அவர் தவறுதலான வழிமுறையின் கொடுமை என்ற தலைப்பில் தனது வலைப்பதிவில் ஒரு கட்டுரையாக வெளியிட்டுள்ளார்.
இது குறித்து பேசிய முகநூலின் தயாரிப்பு மேலாளர் ஜோனதன் கெல்லர் 'இந்த சேவை நிறைய பேருக்கு அற்புதமான ஒரு அனுபவமாக இருந்தது. ஆனால் எரிக் மேயர் விவகாரத்தில் மகிழ்ச்சிக்கு பதிலாக நாங்கள் வருத்தத்தையே கொடுத்திருப்பது தெளிவாகத் தெரிகின்றது. இதற்காக நாங்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோருகின்றோம்' என்று கூறியுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .