2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

தலையை பதம்பார்த்த கத்தி

Kogilavani   / 2015 ஜனவரி 01 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

நபரொருவர், தனது தலையை பதம்பார்த்த கத்தியை அகற்றுவதற்காக இரண்டு மணித்தியாலங்கள் காரில் பயணம் செய்த சம்பவம் பலரை வியக்கவைத்துள்ளது.

பிரேசிலைச் சேர்ந்த ஜுசிலா என்ற 60 வயது நபரின் தலையில் கூரிய கத்தியொன்று 30 சென்ரிமீற்றர் நீளத்துக்கு குத்தியுள்ளது.  

இக்கத்தியை அகற்றுவதற்காக 60 மைல் தூரத்திலுள்ள வைத்தியசாலைக்கு அவர் காரில் சென்றுள்ளார். காரை தானே செலுத்திச் சென்ற இந்நபருக்கு மாரடைப்பும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மிகவும் ஆபத்தான் நிலையில் வைத்தியசாலையில் சேர்ந்த இந்நபரை மருத்துவர்கள் பல மணிநேர போராட்டத்தின் பின்னர் உயிர்மீட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

'கத்தி எவ்வாறு தலையில் குத்தியது என்று நினைவில்லை. வலியும் மயக்கமும் ஏற்பட்டது' என அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இவர் அதிஷ்டவசமாக உயிர்பிழைத்ததாக ஜுசிலாவின் மனைவி தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X