2025 செப்டெம்பர் 08, திங்கட்கிழமை

மரத்தை வெட்டியதால் விபரீதம்

Gavitha   / 2015 ஜனவரி 21 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

நகம் வளர்த்தால் நிச்சயம் அதை வெட்டித்தான் ஆகவேண்டும். ஆனால் யாரும் நகம் வளர்கின்றது என்று விரலையோ கையையோ வெட்டிக்கொள்வதில்லை.


அவ்வாறிருக்கையில், தனது வீட்டுக்குள் மரமொன்றின் இலைகள் விழுந்தது என்ற காரணத்துக்காக, அந்த மரத்தையே வெட்டிசாய்த்த நபர் பற்றி கேள்விப்பட்டுள்ளீர்களா?


இந்தியாவின் கோயம்புத்தூரைச் சேர்ந்த சுந்தரம் என்ற நபரே இத்தகைய விபரீத செயலில் ஈடுபட்டுள்ளார்.


மேற்படி பகுதியில், மரம் வெட்டுவதை தடுக்க கண்காணிப்புக் குழுவொன்று அமைக்கப்பட்டிருந்தது.


மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்றுமரம் வெட்டினாலும் இந்த காண்காணிப்பு குழுவுக்கு தெரிவிக்க வேண்டும் என்றுஅ றிவிக்கப்பட்டிருந்தது.


இந்தநிலையில், குறித்தபகுதியில் உள்ள மரமொன்று வெட்டப்பட்டுள்ளதாக கண்காணிப்பு குழுவுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்டபோது, குறித்த மரத்தை வெட்டியவர் சுந்தரம் என்று தெரியவந்துள்ளது. அவரது வீட்டுக்குள் மரத்தின் காய்ந்த இலைகள், குச்சி மற்றும் சருகுகள் விழுவதாலும் வாகனங்களை சாலையில் நிறுத்த முடியாததாலும் மரத்தை வெட்டியதாக அவர் தெரிவித்துள்ளார்.


மரத்தை வெட்டியதனால் அதனருகில் இருந்தபாதையும் சேதமடைந்துள்ளது.


இதன்காரணமாக இவருக்கு 74,000 செலுத்துமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொகையை செலுத்தாதபட்சத்தில், அவருடைய வீட்டின் மின் மற்றும் நீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதாம்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X