2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

மரக்கறியை பைக்குள் போட்டதால் கதறியழுத கர்ப்பிணி

Gavitha   / 2015 ஜனவரி 21 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கர்ப்பகாலத்தில் பெண்கள் எப்படி நடந்;து கொள்வார்கள் என்று யாருக்கும் தெரியாது. ஒவ்வொரு பெண்ணின் செயற்பாடும் ஒவ்வொருமாதிரி இருக்கும்.


அவ்வாறிருக்கையில், மரக்கறிகளை பொலித்தீன் பைக்குள் போட்டதால் கர்ப்பிணியொருவர் கதறயழுத சம்பவம் பலரை நகைப்படைய செய்துள்ளது.  


இதுவரை அவர் ஏன் அழுதார் என்று அவருடைய கணவருக்கு கூட தெரியாதாம்.


9 மாத கர்ப்பிணியும்; அவரது கணவரும் சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்துள்ளனர். அப்போது மரக்கறிகளை எடுத்து, கணவர் ஒரு பொலித்தீன் பைக்குள் இட்டுள்ளார்.


இதனைக் கண்ட மனைவி அவற்றை ஏன் பைக்குள் போட்டீர்கள். ஏன் என்னை வேடிக்கை பொருளாக பார்க்கின்றீர்கள்? என கேட்டு கதறி அழுதுள்ளாராம்.


தனது மனைவி சிரிக்கின்றாரா அழுகின்றாரா என்பது கூட ஆரம்பத்தில் தனக்கு தெரியவில்லை என்று பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளார்.


இக்காட்சிகள் அடங்கிய வீடியோ இணையத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை 939,000 பேர் பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X