Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Gavitha / 2015 ஜனவரி 27 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழமை நாட்களில் கடுமையாக உழைக்கும் அனைவரும் விடுமுறை தினங்கள் வரும் போது எவ்வாறு உடல் வலியை நீக்கிக்கொள்வது என்று தேடுவது வழமையாகும். சிலர் அழகுசாதன நிலையங்களுக்கு சென்று மசாஜ் செய்து கொள்வதுமுண்டு.
இவ்வாறிருக்கையில் பிலிப்பைன்ஸில், சேபு நகர விலங்கியல் பூங்காவில் மலைப்பாம்பு மசாஜ்கள் செய்யப்படுகின்றதாம். இந்த விலங்கியல் பூங்காவை கொண்டு நடத்துவதற்கு, யார் பணம் வழங்க முன்வருகின்றார்களோ அவர்களுக்கே இந்த மலைப்பாம்பு மசாஜ் சலுகை வழங்கப்படுகின்றதாம்.
இது ஒரு வர்த்தகமாகவே மாறி வருகின்றது. நான்கு மலைப்பாம்புகளை கொண்டு இந்த மசாஜ் சேவை வழங்கப்படுகின்றது. ஒரு மலைப்பாம்பு 5 மீற்றர் நீளத்தையும் 250 கிலோ கிராம்களை கொண்டுள்ளது.
இது பிலிப்பைன்ஸில் மிகவும் பிரபலமான மசாஜ் என்று கூறப்படுகின்றது. முதலில் வருபவர்கள் மலைப்பாம்பு மசாஜை கண்டு பயப்படுவார்கள், ஆனால் ஒரு முறை மசாஜ் பெற்றவுடன் அது பிடித்திருக்கின்றது என்று கூறுகின்றார்கள் என்று விலங்கியல் பூங்காவின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
35 minute ago
2 hours ago