2025 செப்டெம்பர் 08, திங்கட்கிழமை

பூனையின் சொர்க்க பூமி

Gavitha   / 2015 ஜனவரி 27 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பூனையை அபசகுனமாக கருதுவோரே எம்மில் அதிகம். பூனை குறுக்கே ஓடினால் சகுனம் சரியில்லை என்று தமது நற்காரியங்களை தள்ளி போடுவோரும் இருக்கவே செய்கின்றார்கள்.

ஆனால், வழமைக்கு மாறாக தனது வீட்டையே பூனைகளின் சொர்க்க பூமியாக மாற்றிய நபர் தொடர்பில் கேள்விப்பட்டுள்ளீர்களா?

ஆம் அமெரிக்கா, கலிபோர்னியா மாகாணம், கொலிடா என்ற பிரதேசத்தைச் சேர்ந்தவர் பீட்டர் கோஹின். இவர் 15 பூனைகளை வளர்த்து வருகின்றார். இவற்றுக்காக தனது வீட்டையே பூனைகளின் சொர்க்க பூமியாக மாற்றியுள்ளார்.

இதற்காக அவர் கடந்த 20 வருடங்களை செலவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாது, 40,000 அமெரிக்க
டொலர்களை செலவுசெய்து தனது வீட்டை பிரமாண்டமான மாளிகையாக இவர் மாற்றியுள்ளார். அதேபோன்று பூனைகள் வீட்டை சுற்றி ஓடித்திரிவதற்காக சிக்கலான பாதைகள், சுரங்கங்கள் விளையாட்டு மைதானங்களை உருவாக்கியுள்ளார்.

'இவ்வாறான வீட்டை வடிவமைப்பதென்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல. ஆனால், அதனை நான் பொருட்படுத்தவில்லை. நான் எனது பூனைகளை, வீட்டை, கலையை நேசிக்கிறேன். அதனால், அவற்றை அழகுபடுத்த நினைத்தேன்' என அவர் கூறியுள்ளார்.

'பூனைகள் தொந்தரவுகள், அசௌகரியங்களின்றி சுதந்திரமாக வாழ்வதற்கே இத்தகைய ஏற்பாடுகளை செய்துள்ளேன். அவை எமக்கு நிபந்தனையற்ற அன்பையே வழங்குகின்றன. அதற்காக அவற்றை மட்டற்ற மகிழ்ச்சியுடன் வைத்துக்கொள்ள வேண்டும்' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X