2025 செப்டெம்பர் 08, திங்கட்கிழமை

திருக்கைகளின் சாகசம்

Gavitha   / 2015 ஜனவரி 27 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருக்கைகள், கடலிலிருந்து வெளிக்கிளம்பி பத்து அடி உயரம் வரை பாயும் அரிய காட்சியடங்கிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த புகைப்படங்கள், மெக்ஸிகோவில் உள்ள புல்மோ தேசிய பூங்காவில் ஒக்டோவியா என்பவரினால் எடுக்கப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான திருக்கைகள் ஒன்றாக கூடி ஒரே சமயத்தில் நீருக்கு வெளியே பாய்ந்த அரிய காட்சியை இவர் அவரது கமெராவில் படமாக எடுத்துள்ளார்.

ஒக்டோவியா, சமுத்திரவியல் பேராசியரியராவார். திருக்கைகள் இவ்வாறு ஒன்றாக பாய்வதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதிகாலையில் இவை வரும் சத்தத்தை கேட்கமுடியும். அடிவானம் வெளுக்கும் போது, திருக்கைகள் பாய்வதை காணமுடியும். சில வருடங்களில், திருக்கைகள் பாயும் அளவு பல மைல்கள் அப்பாலுக்கு சென்றாலும் தெரியும். அவ்வளவு உயரத்துக்கு பாய்ந்து செல்லும். கடல் உயிரினங்களில் பெரும் சாகச விளையாட்டு காட்டும் பிராணியாக திருக்கைகள் உள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X