2025 செப்டெம்பர் 09, செவ்வாய்க்கிழமை

மரித்து போகாத மனிதாபிமானம்

Gavitha   / 2015 பெப்ரவரி 11 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுயநல காற்று சுற்றிச் சுற்றி வீசினாலும் சமூக நலனில் அக்கறை கொண்டு ஆங்காங்கே அர்ப்பணிப்புடன் செயற்பட்டு ஏதாவது ஒரு வகையில் யாரோ ஒரு சிலர் செய்யும் தியாகங்களே உலகில் வாழும் மனிதர்களின் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குகின்றது.


இங்கிலாந்தின் அல்விச் என்ற நகரில் வாழ்ந்து வரும் நான்கு வயதுடைய சிறுவன் பிறக்கும் போதே மாற்றுத்திறனாளியாக பிறந்துள்ளான்.


ஆனால் சமீபத்தில் இவருக்கு ஏற்பட்ட காக்காய் வலிப்பு நோய் காரணமாக, சிறுவனால் இனி நடக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு சக்கர கதிரையும் வழங்கப்பட்டுள்ளது.


ஆனால், சக்கர கதிரையை பயன்படுத்தி வீடு முழுவரும் வளம் வரும் அளவுக்கு வீட்டின் அமைப்பு இருக்கவில்லை. இதனால், சிறுவனின் பெற்றோர் அவருக்கென்று புதிய வீடொன்றை வடிவமைப்பதாக முடிவெடுத்துள்ளனர்.


அவ்வாறான வீட்டை நிர்மாணிப்பதற்கு பெரிய தொகை பணம் செலவாகும் என்றும் அதனை செய்து முடிப்பதற்கு கட்டுமாண பணியாளர்கள்; தேவைப்படுவர்; என்றும் பலர் ஆலோசனை கூறியுள்ளனர்.


இதற்கான அதிகூடிய பணமோ, அதற்கான வசதிகளோ இல்லாத நிலையில், இந்த திட்டத்தை பெற்றோர் பின்தள்ளிப்போட்டுள்ளனர்.


ஆனால், இந்த விடயம் சம்பந்தமாக கேள்வியுற்ற கட்டட பணியாளர்கள் குழுவொன்று  குறித்த குடும்பத்துக்கு இலசவமாக வீடு கட்டித்தருவதாக உறுதியளித்துள்ளனர்.


வீடு கட்டுவதற்கான பொருட்களை வாங்கித்தரும் படியும் கட்டுபவர்களுக்கான கூலி எங்களுக்கு வேண்டாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


மேற்படி பணியாளர்கள், 100,000 பெருமதியான வேலையை இலவசமாக செய்து கொடுத்துள்ளனராம். அதற்கும் மேலதிகமாக  வேலை செய்பவர்கள்; பணம் செலுத்தி பொருட்களையும்; வாங்கியுள்ளனராம்.
இவ்வாறு மனிதாபிமான கொள்கை கொண்டவர்கள் பலர் உலகில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X