2025 மே 12, திங்கட்கிழமை

வைத்தியராக மாறிய கூகுல் டிரான்ஸ்லேட்டர்

Gavitha   / 2015 பெப்ரவரி 11 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த உலகிலுள்ள அனைத்து செயற்பாடுகளுக்கும் கூகுல் எப்படியாவது உதவி செய்துகொண்டுதான் இருக்கின்றது.
இவ்வாறு உதவி புரியம் கூகுல் அதன் கூகுல் டிரான்ஸ்லேட்டர் மூலம் பெண்ணொருவரின் பிரசவத்துக்கும் உதவியுள்ளது. ஆம், இந்த சம்பவம் அயர்லாந்தில் நடைபெற்றுள்ளது.


அயர்லாந்தில் வாழ்ந்து வரும் காங்கோ நாட்டுப் பெண் ஒருவர் பிரசவத்துக்காக, கார்க் பலகலைக்கழக மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.


அவருடன் ஹெர்ரி மற்றும் ஷேன் என்ற இரண்டு செவிலியர்களும் சென்றுள்ளனர். செவிலியர்களுக்கு ஆங்கிலம் மட்டுமே தெரியும். வேறு மொழி தெரியாது.


ஆனால், கர்ப்பிணிக்கோ ஸ்வாகிலி எனப்படும் மொழி மட்டுமே தெரியும்.


இந்நிலையில், மருத்துவமனைக்கு செல்லும் பாதையில் வைத்து, கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவ வலி அதிகரித்தது.
உடனடியாக பிரசவம் பார்த்தால் மட்டுமே தாயையும் சேயையும் காப்பாற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், அப்பெண் பேசுவது செவிலியர்களுக்குப் புரியவில்லை. செவிலியர்கள் பேசுவது பெண்ணுக்கு புரியவில்லை.


அந்த நேரத்தில், சாமர்த்தியமாக சிந்தித்த செவிலியர்கள், அவர்களது அலைபேசியில் இருந்த கூகுள் டிரான்ஸ்லேட்டரின் உதவியுடன் ஸ்வாகிலி மொழியை ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்து அப்பெண்ணுடன் பேசி, பிரசவம் பார்த்துள்ளனர்.


குறித்த பெண்ணுக்கு அழகிய பெண் சிசு ஒன்று பிறந்துள்ளது. சாமர்த்தியமாக தக்க நேரத்தில் இணையத்தின் உதவியை கொண்டு செயற்பட்ட அந்த இரண்டு செவிலியர்களுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றனவாம்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X