2025 செப்டெம்பர் 08, திங்கட்கிழமை

பேய் பங்களாவை விலைக்கு வாங்கிய வீரர்

Gavitha   / 2015 பெப்ரவரி 25 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேய், பூதம் என்று லேசாக கூறினாலே, பேயா? என்று அலறியடித்துக்கொண்டு ஓடுபவர்கள் எம்மில் அதிகம்.
அவ்வாறிருக்கையில், பேய் பங்களா என்று தெரிந்தும் கூட கால்பந்தாட்ட வீரரொருவர் மாட மாளிகையொன்றை விலைக்கு வாங்கியுள்ளார்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், எகிப்தில் மன்னராக இருந்தவர் துட்டன்காமுன். இவரது கல்லறையை 1923ஆம் ஆண்டு பெப்ரவரி 16ஆம் திகதி திறந்து பார்த்துள்ளனர்.

எகிப்தின் நைல் நதிக்கு அருகில் இருக்கும் தீப்ஸ் பகுதியில் 3000 ஆண்டுகளாக, உலகின் கண்களில் இருந்து மறைந்து கிடந்த துட்டன்காமுனின் கல்லறையை, பிரிட்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஹாவர்டு கார்ட்டர், அவரது நண்பர் லார்டு கார்னர்வோன் ஆகியோர் திறந்தனர்.

கல்லறையின் நான்காவது மற்றும் கடைசி அறை, பல அதிகாரிகளின் முன்னிலையில் திறக்கப்பட்டது. ஒன்றுக்குள் ஒன்றாக வைக்கப்பட்டிருந்த மூன்று சவப்பெட்டிகளின், கடைசிப் பெட்டியில், மன்னர் துட்டன்காமுன் மீளாத் துயிலில் ஆழ்ந்திருந்தார்.

18 வயதில் மர்மமான முறையில் இறந்த மன்னர் இவர். இவரது இறப்புக்கான காரணம் பற்றி இன்றுவரை ஆய்வுகள் தொடர்கின்றன. உடல் நலம் குன்றி இறந்ததாக ஒரு தகவல் உள்ளது. குத்திக் கொலை செய்யப்பட்டதாக இன்னொரு தகவல் உள்ளது. கால் உடைந்து அந்தப் புண் புரையோடி, அதனால் இறந்தார் என்று ஒரு தகவல் உள்ளது.

ஆனால், இதுவரை உறுதியான தகவல் வழங்கப்படவில்லை. இந்தச் சம்பவத்தை வைத்து புனையப்பட்ட கதைகள் ஏராளம்.
தனது கல்லறையைத் திறப்பவர்களுக்கு மரணம் நிச்சயம் என்று துட்டன்காமுனின் கல்லறையில் எழுதப்பட்டிருந்தது. இந்த நிலையில், கல்லறையைத் திறந்து 6 வாரங்களுக்குப் பிறகு, கொசுக்கடியால் ஏற்பட்ட தொற்று நோயால் கெய்ரோ நகரில் கார்னர்வோன் மரணமடைந்தார்.

இதேபோல், அதே ஆண்டில் அந்தக் கல்லறையைப் பார்வையிட்ட ஜார்ஜ் ஜே கவுல்டு என்பவர் சில மாதங்களில் மர்மக் காய்ச்சலால் உயிரிழந்தார். துட்டன்காமுனின் உடலை எக்ஸ்-ரே மூலம் ஆய்வுசெய்த சர் ஆர்ச்சிபால் டக்ளஸ் அடுத்த ஆண்டு மர்ம நோயால் இறந்தார்.

அதேபோல, இந்தப் பணியில் ஈடுபட்ட 58 பேரில் 8 பேர் அடுத்தடுத்து மரணம் அடைந்தனர். அதற்கு மன்னரின் ஆவிதான் காரணம் என்று கூறப்பட்டது. இப்படி பலர் மர்மமாக உயிரிழந்தது பலரின் கற்பனையைப் பயங்கரமாகத் தூண்டிவிட்டது.

இந்நிலையில் துட்டன்காமுனுவின் கல்லறை குறித்த ஆராய்ந்தவர் கார்னர்வோன் என்பவர். இவர் அந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது மரணமடைந்துள்ளார். அவர் வசித்து வந்த மாடமாளிகையை விலைக்கு வாங்கியுள்ளார் எடோ.

காமரூனில் பிறந்தவர் எடோ. செல்சியா அணிக்காக விளையாடி வந்தவர்.

கடலோரத்தில் அமைந்துள்ள இந்த பங்களாவை என்ன செய்யப் போகிறார் என்பது தெரியவில்லை. ஆனால் இதை புனரமைப்பதற்கு 20 மில்லியன் பவுண்டு செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X