2025 மே 12, திங்கட்கிழமை

கோள முட்டையிட்ட கோழி

Gavitha   / 2015 பெப்ரவரி 25 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பறவைகளினதும் ஊர்வனவற்றினதும் முதலாவது வளர்ச்சியே முட்டையாகும். முட்டை எப்போதும் நீள்வட்ட வடிவத்தில் இருப்பதையே காணக்கூடயதாக இருக்கும்.

ஆனால், பெண்ணொருவரின் வீட்டில் வளர்த்த கோழியொன்று கோள வடிவில் முட்டையிட்டுள்ள சம்பவம் இங்கிலாந்தில் இடம்பெற்றுள்ளது.

அந்த முட்டை தற்போது ஈபேயில் 250 பவுண்டுகளுக்கு (eBay) விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளதாம்.

இங்கிலாந்திலுள்ள லட்சிங்டன் பகுதியில் வசித்து வரும் பெண்ணொருவர், தனது வீட்டில் கோழியொன்றை வளர்த்து வந்துள்ளார். இக்கோழி; முட்டைகளை இட்டு வந்துள்ளது.

மேற்படி பெண், கோழி இட்ட முட்டைகளை பார்த்தபோது அதில் ஒரு முட்டை கோல வடிவில் இருப்பதை கண்டு வியந்துள்ளார்.
பின்னர் அதனை விற்பனை செய்வதற்காக இணையத்தளமொன்றில் பதிவு செய்துள்ளார்.

முட்டையை விற்று கிடைக்கும் பணத்தை அறக்கட்டளையொன்றுக்கு நன்கொடையாக வழங்கவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X