2025 மே 12, திங்கட்கிழமை

விஞ்ஞானத்தை விஞ்சிய விதி

Gavitha   / 2015 மார்ச் 18 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நினைத்ததொன்று, ஆனால் நடந்தது இன்னொன்று என்று எம்மில் பலர் புலம்புவதுண்டு. அவ்வாறான சந்தர்ப்பங்களில் சிலர் ஆச்சரியத்தின் உச்சக்கட்டத்துக்கே சென்று விடுவதுமுண்டு. மருத்துவ உலகம் எவ்வளவுதான் முன்னேற்றமடைந்தாலும் அதனால் விதியை வெல்ல முடியாது என்றே கூறலாம். ஏனெனில் மருத்து உலகின் முடிவுகள் பல சமயங்களில் கைமீறி போவதுண்டு. இப்படியான ஒரு சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.

ஸ்கேனிங் சோதனையின் போது, பெண்குழந்தை பிறக்கும் என்று சோதனை முடிவுகள் காட்டிய போதிலும் குழந்தை பிறக்கும் போது, ஆணாக பிறந்த சம்பவம் பிரித்தானியாவில் நடைபெற்றுள்ளது.

இந்த சம்பவத்தால் குழந்தையின் பெற்றோர் அதிர்ச்சியடைந்ததுடன்,   வைத்தியர்களும் ஆச்சரியமடைந்துள்ளனராம்.

இந்த தம்பதியினரின் முதலாவது குழந்தை, பெண் குழந்தை என்று ஸ்கேனிங் சோதனை மூலம் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்களுக்கு பெண் குழந்தை பிறக்கப்போகின்றமையால், அதற்கென ஓர் அறையை பெற்றோர் தயார் செய்துள்ளனர். அதற்கு இளஞ்சிவப்பு வர்ணபூச்சு பூசியுள்ளனர்.

குழந்தைக்கான உடை, படுக்கை என அனைத்து பொருட்களையும் இளஞ்சிவப்பு நிறத்திலேயே வாங்கியுள்ளனர். அதைவிட குழந்தை பிறப்பதற்கு முன்பே, போ (Bo) என்ற பெயரையும் அதற்கு சூட்டிவிட்டனர். தமக்கு பெண் குழந்தை பிறக்க போகின்றதென உறவினர்களுக்கும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பிரசவத்தின் பின்பு தாய் கண்விழித்து எனது மகள் எங்கே என வைத்தியரை கேட்டுள்ளார். அதற்கு வைத்தியர்கள் 'உங்களுக்கு மகன்தான் பிறந்துள்ளான்' என பதலளித்துள்ளார். இதனை கேட்டு குழந்தையின் பெற்றோர் அதிர்ச்சியடைந்ததுடன், குழம்பியும்போயுள்ளனர்.

'எமது ஸ்கேனிங் சோதனை எப்போதும் பிழைத்ததில்லை. ஆனால் இந்த சம்பவத்தை எங்களால் நம்பவே முடியவில்லை' என வைத்தியர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • Yousuf Thursday, 19 March 2015 04:57 AM

    Avan than nadiyavarhalukku aan kulandhaiyum, pen kulandhaiyum kalandhum kodukkinraan ,,, LAKAD HALAK NAL INSAANA FEE AHSANEE THAQVEEM

    Reply : 0       0

    vignesh Friday, 20 March 2015 05:39 PM

    Intha world blive compeutar scaning what god disait evrthing

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X