Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Gavitha / 2015 ஏப்ரல் 08 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
சங்ககாலங்களில், அகநானூறு, புறநானூறு, கலிப்பா, பரிபாடல் போன்ற நூல்களில் ஆடவர்களின் வீரத்தை பார்த்தே பெண்கள் திருமணத்துக்கு ஒத்துக்கொண்டு தான் விரும்பும் ஆணுக்கு மாலையிடுவார்கள்.
ஆனால், தற்போது திருமணத்துக்கு ஆயத்தமாகும் மணமகனுக்கோ மணமகளுக்கோ அகநானூறு, புறநானூறு, கலிப்பா, பரிபாடல் என்றால் என்னவென்றே தெரியாது. இதற்கு பதிலாக 'வரதட்சணை' என்ற சொல்லையே அனைவரும் உச்சரிக்கின்றனர்.
இவ்வாறு விஸ்வரூபம் எடுத்து ஆடும் இந்த 'வரதட்சணை' பாகிஸ்தானில் 10 பேரை கொலை செய்துள்ளது என்றால் நம்புவீர்களா?
ஆம், பாகிஸ்தானின் வடக்கு பகுதியில் சார்சடா மாவட்டத்தைச் சேர்ந்தவர் குல் அஹமத் சயித் என்பவர் பாகிஸ்தானில் பொலிஸாக கடமையாற்றி வருகின்றார்.
இவருக்கும் இவருடைய மாமா மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மணமகளுக்கு வரதட்சணையாக ஒரு தொகை தங்கத்தை மணமகன் வழங்கியுள்ளார்.
பின்னர், ஏதோவொரு காரணத்துக்காக திருமணம் நடைபெறாது நின்றுவிட்டது. திருமணம் நடைபெறாததன் காரணத்தினால், தான் கொடுத்த வரதட்சணையை திருப்பித்தருமாறு மணமகன் கேட்டுள்ளார்.
இதோ தருகிறேன், இதே தருகிறேன் என்று 6 மாதமாக வரதட்சரணையை மாமானார் திருப்பிக்கொடுக்கவே இல்லையாம். கடைசியில் வரதட்சணையை திருப்பிக்கொடுக்க முடியாது என்று மாமா உறுதியாக சொல்லிவிட்டாராம்.
இதனால் ஆத்திரங்கொண்ட மணமகன், இரவு அனைவரும் தூங்கிக்கொண்டிருந்த போது, துப்பாக்கியுடன் மணமகள் வீட்டுக்கு சென்றுள்ளார்.
தூங்கிக்கொண்டிருந்தவர்களை கருணையின்றி சுட்டுக்கொன்றுள்ளார்.
இச்சம்பவத்தில் மணமகள் அவரது பெற்றோர், 2 சகோதரர்கள், 2 குழந்தைகள் 3 பெண்கள் உட்பட 10 பேர் குண்டுகள் பாய்ந்து பலியாகினர்.
அதை தொடர்ந்து அவர் தப்பி ஓடிவிட்டார். இது பாகிஸ்தான் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இனி 'வரதட்சணை' என்ற சொல் எடுபடும் போது, ஒன்றுக்கு இரண்டு தடவை சிந்தித்து பார்த்தால் வாழ்வை தக்கவைத்துக்கொள்ள முடியும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
5 minute ago
21 minute ago
23 minute ago