2025 மே 12, திங்கட்கிழமை

ஆட்டுக்கு அதில்தான் விருப்பமாம்

Gavitha   / 2015 ஏப்ரல் 19 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலைகளில் ஓவியங்கள் வரைவதற்கென்று தனியானதொரு பாடம் இருந்தாலும் ஓவியங்களை வரைவதற்கு ஒரு சிலரே திறமையானவர்களாக இருப்பார்கள்.

டச்சு ஓவியங்களுக்கு உலக புகழ் பெற்றவர் 'வின்சென்ட் வான் கா' என்பவரே. ஆனால், தற்போது இவருடைய பெயரை ஆடு ஒன்று தன்வசமாக்கிக்கொண்டுள்ளது.

ஆடு ஒன்று அழகான ஓவியங்களை வரைந்து கலக்கி வருகின்றதாம். இதற்கு 'வின்சென்ட் வான் கோட் (ஆடு)' என்று செல்லமாக பெயர் சூட்டப்பட்டுள்ளதாம்.

அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநிலத்தின் அல்புக்வெர்க் தாவரவியல் பூங்காவில் போடி என்ற 4 வயது ஆடொன்று வசித்து வருகின்றது. அந்த பூங்காவின் பணியாளரான கிறிஸ்டியன் ரைட், இந்த ஆட்டுக்கு பொழுது போக்காக ஓவியம் வரைவதற்கு பயிற்சி கொடுக்கத் தொடங்கியுள்ளார். ஆனால், போடியோ, மிக வேகமாக ஓவியங்களை வரைய கற்றுக்கொண்டது.

வாயில் தூரிகையை பிடித்துக் கொண்டு, துல்லியமாக ஓவியம் வரையும் போடியை பார்ப்பதற்கு கோடிக்கண்கள் வேண்டும் என்று அதிசயிக்கிறார் பூங்காவின் மேலாலர் 'லின்'. போடி ஓவியம் வரையும் அழகை ரசிப்பதற்காகவே மாலையின் பலர் பூங்காவுக்கு வருகின்றனர்.

போடி வரையும் ஓவியங்கள் அனைத்தும் நியூ மெக்சிகோவில் உள்ள பயோபார்க் சொசைட்டியில் 40 டொலருக்கு விற்பனை செய்யப்படுகின்றதாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X