2025 செப்டெம்பர் 04, வியாழக்கிழமை

குடிநீர் போத்தல்களில் கெஞ்சும் பறவைகள்

Gavitha   / 2015 மே 05 , பி.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகிலேயே மிகவும் அரியவகை பறவைகளில் ஒன்றாக கொக்கெட்டூஸ் எனும் பறவைகளை குடிநீர் போத்தல்களில் அடைத்து நாடு கடத்த முற்பட்ட போது, இந்தோனேசிய பொலிஸார் அவற்றை கைப்பற்றியுள்ளனர்.

குடிநீர் போத்தலில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 24 பறவைகளை இந்தோனேஷியாவின் சுரபயாவில் அமைந்துள்ள தஞ்சோப் போராக் எனும் துறைமுகத்தில் வைத்தே கைப்பற்றியுள்ளனர்.

நீர் இல்லாத வெறும் போத்தல்களிலேயே இவை அடைக்கப்பட்டுள்ளன. இவை சுமார் 650 பவுண்டுகளுக்கு விற்பனை செய்யமுடியும் என்றும் இவற்றை மருத்துவ சிகிச்சைகளுக்காவும் பயன்படுத்த முடியும் என்றும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேநேரம் கடந்த காலங்களில் நாடுபூராகவும் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, சுமார் 10,000 பறவைகள் கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் பிடிக்கப்பட்டுள்ளன.

சில பறவைகள் மூச்சடைத்து இறந்துவிடும் அபாயநிலைக்கு மத்தியிலேயே இவை மிகவும் கொடூரமான முறையில் கடத்தப்படுகின்றன.

இவ்வாறான பறவைகள் வருடத்துக்கு இரண்டு முட்டைகள் மாத்திரமே இடக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .