Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Thipaan / 2015 ஜூன் 07 , மு.ப. 07:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
காற்றடைக்கப்பட்ட விளையாட்டுக் கோட்டை (bouncy castle), காற்றில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்ததால் மூன்று வயதான சிறுமி உயிரிழந்த சம்பவம்; தெற்கு சீனாவிலுள்ள குவாங்சி பிராந்தியத்ததில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சிறுமி, நவீன அங்காடி ஒன்றுக்கு வெளியே இருந்த காற்றடைக்கப்பட்ட விளையாட்டுக் கோட்டையில் விளையாடிக்கொண்டிருந்த போது, அந்த கோட்டை சிறிய புயலால் தூக்கி வீசப்பட்டுள்ளது.
இதன்போது படுகாயமடைந்த சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரழந்துள்ளார்.
இந்த சம்பவம் இடம்பெற்ற போது, குறித்த சிறுமியை காப்பாற்ற ஒரு பெண் முயன்றபோதும் அம்முயற்சி பலனளிக்கவில்லையென அந்நாட்டின் செய்தி நிறுவனமொன்று தெரிவித்துள்ளது.
நவீன அங்காடிக்கு வெளியே காணப்பட்ட காற்றடைக்கப்பட்ட விளையாட்டுக் கோட்டை சரியாக பராமரிக்கப்படுவதில்லையென தெரிவித்த அப்பிராந்தியத்தின் வேலை பாதுகாப்பு பணியகம், அந்த விளையாட்டுக் கோட்டைக்கான உரிமமும் பெறப்படவில்லையென தெரிவித்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jul 2025
04 Jul 2025