2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

80 வயது பாட்டியை நிர்வாணமாக்கி கழுதை மீதேற்றிய கும்பல்

Kogilavani   / 2014 டிசெம்பர் 07 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

80 வயது மூதாட்டியை நிர்வாணமாக்கி கழுதை மீதேற்றி கிராமத்தில், ஊர்வலமாக அழைத்துசென்று அவமானபடுத்திய சம்பவமொன்று இந்தியா, ராஜஸ்தான் மாநிலம் பில்வரா மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

பில்வரா மாவட்டம் கி கமேரி என்ற கிரமத்திலே இத்துர்சம்பவம் நிகழ்ந்துள்ளது.  இக் கிராமத்தைச் பஞ்சாயத்தார், மேற்படி மூதாட்டிக்கு சூனியக்காரி என்ற பட்டத்தை சூட்டியுள்ளதுடன் அவரை நிர்வாணப்படுத்தி கழுதை மீதேற்றி கிராமத்தை வலம் வரச்செய்யுமாறு கிராமத்தவருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

அவரிடம் யாரும் பேசக் கூடாது என்றும் மீறினால் 1 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் பஞ்சாயத்தார் கிராமத்தவர்களுக்கு எச்சரித்துள்ளனர்.

மேற்படி மூதாட்டியின் கணவர் 37 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். பிள்ளைகளின்றி வாழ்ந்து வந்த இவருக்கு கிராமத்தில் ஒரு சிறு நிலம் உள்ளது.

அந்த நிலத்தை பறிப்பதற்கு பலர் முயற்சி செய்து வந்துள்ளனர். இதற்காக அவரை கடந்த சில வருடங்களாகவே தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இந்நிலையில்தான் தற்போது கழுதை மீது ஏற்றி ஊர்வலம் போகச் செய்து அவமதித்துள்ளனர் என்று கிராமத்தில் சிலர் கூறியுள்ளனர்.

ஒரு மாதத்துக்கு முன்பு ராஜ்சமந்த் என்ற ஊரிலும்; 50 வயதுப் பெண்ணை நிர்வாணப்படுத்தி கழுதை மீது ஏற்றி ஊர்வலமாக அழைத்துச்சென்று அவமானப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X