2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

உணவை விழுங்கிய 9 பேர் பலி

Gavitha   / 2015 ஜனவரி 06 , பி.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தாண்டு தினத்தில் பட்டாசு வெடித்து காயமாகி மரணமடைந்த சம்பவங்கள் மாத்திரமே நாம் கேள்விப்படுவதுண்டு.
அவ்வாறிருக்கையில், உணவு வகையொன்றை உண்டு 9 பேர் உயிரிழந்த சம்பவம் ஜப்பானில் இடம்பெற்றது. அது மாத்திரமல்லாது 13 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஜப்பான் நாட்டின் பாரம்பரிய உணவாக கருதப்படும் மொச்சி ரைஸ் கேக் எனப்படும் உணவை உண்டே இந்த 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

புத்தாண்டு தினத்தன்று அனைவரும் பரபரப்பாக இருப்பது வழக்கம். மற்றைய நாட்களை விட புத்தாண்டு நாட்களில் எப்படியும் அனைவரும் அதிகமாக உண்பர்.

மொச்சி ரைஸ் கேக் என்பது வாயில் ஒட்டும் தன்மையை கொண்டது. இதனால் இதனை நன்றாக மென்று உண்ண வேண்டும்.
இந்நிலையில் மேற்படி நபர்கள், அவசரத்தில் இந்த உணவை மெல்லாது பெரிய பெரிய துண்டுளாக வாயில் போட்டு விழுங்கியுள்ளனர்.

ஏற்கெனவே ஒட்டும் தன்மையை கொண்டதாக காணப்படும் குறித்த உணவு, உண்டவர்களின் தொண்டையில் சிக்கிக்கொண்டதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இவர்கள் உயிரிழந்துள்ளனர்.
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X