Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2020 மே 08 , மு.ப. 07:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவில் 5 வயது சிறுவன் அதிவேகமாக காரை ஓட்டி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் உட்டா மாநிலத்தில் நெடுஞ்சாலை ஒன்றில் மிக வேகமாக கார் ஒன்று சென்றிருக்கிறது. உடனடியாக அந்த காரை பின் தொடர்ந்து சென்று பொலிஸார் நிறுத்தினர்.
காரை திறந்து பார்த்ததும் பொலிஸார் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கின்றனர்.
காரை ஓட்டி சென்றது 5 வயது சிறுவன். எங்கே செல்கிறாய் என விசாரித்ததில் தான் லம்போர்கினி கார் வாங்க போவதாகவும், அதற்காக தந்தையின் காரை எடுத்து செல்வதாகவும் கூறியுள்ளான்.
ஆனால் அந்த சிறுவனிடம் வெறும் 3 டொலர்கள் மட்டுமே இருந்துள்ளது. உடனடியாக சிறுவனின் பெற்றோரை வரவழைத்த பொலிஸார் விசாரணை மேற்கொண்ட பிறகு சிறுவனை அவர்களோடு அனுப்பி வைத்துள்ளனர்.
மில்லியன் டாலர் பெருமானம் உள்ள லம்போர்கினி காரை வாங்க 3 டொலர்களோடு காரில் பறந்த சிறுவனின் செயல் அமெரிக்காவில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
04 Jul 2025