Gavitha / 2016 ஏப்ரல் 10 , மு.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

அன்றைய தெய்வீகக் காதல் மாறி, இன்று இன்டர்நெட் காதல், முற்றிய காதல், பருவக்காதல் என்று காதலின் வகைகள் நீண்டுக்கொண்டே போகின்றது. காதலின் எல்லா வகைகள் குறித்தும் கேள்விப்பற்றிருப்பீர்கள், ஆனால் அம்மா, மகன் காதல் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா?
அம்மா, மகன் பாசம் தானே என்று தப்பாக எடைபோடவேண்டாம்.
அமெரிக்காவைச் சேர்ந்த கிம் வெஸ்ட் என்ற (வயது 51) பெண், தன்னுடைய மகனை (வயது 33) திருமணம் செய்துக்கொள்ளப்போவதாக பகிரங்கமாக அறிவித்துள்ளாராம். இதைக் கேட்க அசிங்கமாக இருந்தாலும் இது உண்மையான சம்பவம்.
ஆம், குறித்த பெண் தனக்குப் பிறந்த மகனை சிறுவயதிலேயே வேறொருவருக்கு தத்துக்கொடுத்துள்ளார். அவர் தற்போது விக்டோரியா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், இரண்டு வருடங்களுக்கு முன்னர் கிம் (தாய்) தனது மகனை யார் என்றே தெரியாமல் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்துள்ளார்.
அப்போது, ஏதோ ஒரு இனம்புரியாத ஈர்ப்பு இருவருக்கிடையேயும் வந்துள்ளது. அது தாய் மகன் பாசம் என்பதை புரிந்துக்கொள்ளாத இருவரும் காதலிக்க ஆரம்பித்துள்ளனர். இருவரும் மிகவும் நெருக்கமாக பழகியுமுள்ளனர்.
அதன் பின்னர்தான் பென் (மகன்) தான் பெற்றெடுத்து தத்துக்கொடுத்த மகன் என்பது கிம்முக்கு (தாய்) தெரியவந்துள்ளது.
எனினும் இருவருக்கும் காதலை மறக்க முடியாது என்பதால், இருவரும் திருமண பந்தத்தில் இணையவுள்ளனராம்.
பென் போர்ட் தனது மனைவி விக்டோரியாவை விவாகரத்து செய்துள்ளார். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ளவும் தயாராக உள்ளனராம்..!!
6 minute ago
22 minute ago
31 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
22 minute ago
31 minute ago
35 minute ago