2025 ஓகஸ்ட் 31, ஞாயிற்றுக்கிழமை

இரத்தமும் சதையுமாக மாறிய அதிசய நற்கருணை

George   / 2015 ஒக்டோபர் 24 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் பரப்பாங்கண்டல் கன்னியர் மடத்தில் வைக்கப்பட்டிருந்த நற்கருணை, இரத்தமும் சதையுமாக மாறிய அதிசயம், வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

இரத்தமும், சதையுமாக மாறிய நற்கருணை பரப்பாங்கண்டல் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் இந்த அதிசயத்தை, மன்னார் மாவட்டம் மற்றும் ஏனைய மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வருகை தந்து பார்வையிடுகின்றனர்.

பரப்பாங்கண்டல் கன்னியர் மடத்தில் உள்ள அருட்சகோதரி ஒருவர், வியாழக்கிழமை மாலை நற்கருணை இரத்தமும் சதையுமாக மாறியுள்ளதை கண்டுள்ளார்.

இவ் அதிசயம் தொடர்பில் அருட்சகோதரி, உடனடியாக பரப்பாங்கண்டல் பங்கு தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இரத்தமும் சதையுமாக மாறிய நற்கருணை பரப்பாங்கண்டல் ஆலயத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .