2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

உறங்கிய மணமகனுக்குக் காத்திருந்த அதிர்ச்சி

Ilango Bharathy   / 2023 மார்ச் 20 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 பீகார் மாநிலம், பகல்பூர் மாவட்டத்தில் உள்ள ‘சுல்தான்கஞ்ச்‘  பகுதியைச் சேர்ந்த நபருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த 13 ஆம் திகதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் திருமணத்தன்று பெண் வீட்டார்  மாப்பிள்ளையின் வருகைக்காக மண்டபத்தில் காத்திருந்தனர்.  எனினும் திருமண நேரத்தைக் கடந்தும் மணமகன் வருகை தராததால் கவலையடைந்த பெண்வீட்டார்  இது குறித்து விசாரித்த போது, திருமணத்திற்கு முதல் நாள் மணமகன் நன்றாகக் குடித்துவிட்டு போதையில் உறங்கிக் கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மணமகள் ”இத்தகைய குடிகார நபரை தன்னால் திருமணம் செய்துகொள்ள முடியாது எனத் தெரிவித்து, திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

அத்துடன் திருமண ஏற்பாட்டிற்கு செய்த செலவு தொகையை திருப்பி தருமாறும் பெண் வீட்டார் மாப்பிள்ளையிடம் கேட்டுள்ளனர்.

இது தொடர்பாக இரு தரப்புக்கும் தகராறு ஏற்படவே, மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரை சிறை பிடித்துள்ளனர். இந்நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இரு வீட்டாருடனும் பேசி பிரச்சனையை முடித்து வைத்துள்ளனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X