2025 மே 07, புதன்கிழமை

‘உறைந்த நயகரா’

Editorial   / 2019 ஜனவரி 24 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் மிக அழகானதும், நீளமானதுமான நதியான நயாகரா, தற்பொழுது ​அமெரிக்காவில் நிலவிவரும் கடுங்குளிரான வானிலை மாற்றம் காரணாக, பனிப்படர்ந்து உறைந்துப்போய் காட்சியளிப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

திங்கட்கிழமை (21) அங்கு கடுமையாக நிலவிய குளிரின் காரணமாக, இந்நதியானது உறை நிலைக்கு மாறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, இதனை பார்வையிடுவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகைதந்த வண்ணமுள்ளதாகவும், இப்பகுதியில் தற்பொழுது வெப்பநிலை -20 பாகை செல்சியல் நிலவி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உறை நிலையில் காட்சியளிக்கும் நயாகராவின் பிரம்மிக்க வைக்கும் இந்த அழகிய தோற்றத்துடனான புகைப்படங்கள், தற்பொழுது சமூகவலைத்தளங்களில் முக்கிய இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X