Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2014 டிசெம்பர் 24 , மு.ப. 06:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆணை பெண்ணாக மாற்றுவதற்கும் பெண்ணை ஆணாக மாற்றுவதற்கும் பல்வேறு பாலியல் சிகிச்கைகள் தற்காலத்தில் உள்ளன. அவ்வாறு செய்து கொள்வதற்கு பலநாடுகள் அங்கிகாரமும் வழங்கியுள்ளன.
அந்த வகையில் ஆர்ஜென்டினாவில் யாருமே எதிர்பார்க்காத சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சிறுமிகள் விரும்பி விளையாடும் பார்பிபொம்மை (டியசடிநை னழடட) ஆணுறுப்பை கொண்டிருப்பதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனைக்கண்டு ஆர்ஜென்டினாவில் பெற்றோர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த பொம்மை உலகிலேயே முதலாவது இருபால் பொம்மை என்று கருதப்படுகின்றது.
தனது மூன்று வயது குழந்தைக்கு தாயொருவர் பார்பி பொம்மையை வாங்கிக் கொடுத்துள்ளார். குழந்தை விளையாடிக் கொண்டிருக்கையில், பொம்மையின் விசித்திர தன்மையை அவதானித்த குழந்தை, தாயை அழைத்து கூறியுள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சியுற்ற தாய் அதனை புகைப்படமாக எடுத்து, அவருடை முகப்புத்தகத்தில் தரவேற்றம் செய்துள்ளார்.
இந்த பொம்மையானது சீனாவில் தயாரிக்கப்பட்டு ஆர்ஜென்டினாவின் மொத்த விற்பனையாளரொருவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறான பொம்மைகளை விநியோகிப்பதன் மூலம் வளர்ந்துவரும் இளைய சமூதாயம் சிறுவயதிலேயே சீர்குலைந்துவிடும் என்று ஆர்ஜென்டினாவின் பெற்றோர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
அது மாத்திரமல்லாது இளைய சமூதாயத்துக்கு இது ஒரு தொந்தரவாக அமையக்கூடும் என்றும் கூறப்படுகின்றது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago